Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி-யை இணைக்க ஆலோசனை? இபிஎஸ் டெல்லி பயணம்..

EPS trip to delhi: அதனால், இன்றைய சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் பேச்சுவார்த்தை செய்யப்பட்டு, இறுதி செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது.

கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி-யை இணைக்க ஆலோசனை? இபிஎஸ் டெல்லி பயணம்..
எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 07 Jan 2026 12:44 PM IST

சென்னை, ஜனவரி 07: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நேற்று மாலை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெல்லி சென்றிருந்தார். அவரைத் தொடர்ந்து, தற்போது எடப்பாடி பழனிசாமியும் டெல்லி செல்ல உள்ளார். அங்கு பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை சந்திக்காத நிலையில், வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையும் படிக்க: “திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ஊழல்”.. ஆளுநரிடம் இபிஎஸ் பரபரப்பு புகார்!!

இன்று இரவு அமித்ஷாவை சந்திக்கிறார் இபிஎஸ்?

இந்நிலையில், இன்று திடீர் பயணமாக டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, பாஜக மூத்த தலைவர்களை அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அமித்ஷாவை அவரது இல்லத்தில் இன்று இரவு எடப்பாடி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, அதிமுக- பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கை குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.

40 – 50 தொகுதிகளை கேட்கும் பாஜக?

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. தற்போதைய தேர்தலில் அதிமுகவிடம் அதிக தொகுதிகளை பாஜக எதிர்பார்க்கிறது. அதாவது, 40 – 50 தொகுதிகளை கேட்பதாக தெரிகிறது. அதோடு, அதிமுக – பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சேர்க்க பாஜக தலைவர்கள் தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால், இன்றைய சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் பேச்சுவார்த்தை செய்யப்பட்டு, இறுதி செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்… மதுரை அமர்வு பரபரப்பு தீர்ப்பு!

20க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கும் அன்புமணி?

முன்னதாக அன்புமணி ராமதாஸ் தரப்பில் இருந்து 20க்கும் மேற்பட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதேபோல், ராமதாஸ் தரப்பை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனைகளையும் பாமக சில அம்சங்களாக முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.