Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புத்தகப் பிரியர்களே.. நாளை தொடங்குகிறது 49வது சென்னை புத்தக கண்காட்சி.. சிறப்புகள் என்ன?

Chennai Book Fair: 49-வது சென்னை புத்தகக் கண்காட்சியில் சுமார் 900 அரங்குகள் அமைக்கப்படும் எனவும், விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவு சீட்டுக் கட்டணம் வசூலிக்கப்படும்; ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச நுழைவு வழங்கப்படும்.

புத்தகப் பிரியர்களே.. நாளை தொடங்குகிறது 49வது சென்னை புத்தக கண்காட்சி.. சிறப்புகள் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Jan 2026 12:15 PM IST

சென்னை, ஜனவரி 7, 2026: புத்தகப் பிரியர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 49-வது சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 8, 2026 தேதியான நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கி 14 நாட்கள், அதாவது ஜனவரி 21, 2026 வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறினாலும், தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பப்பாசி) நடத்தும் இந்த சென்னை புத்தகக் கண்காட்சி மிகவும் பிரபலமானதாகும். அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்திருக்கும். அதேபோல், இங்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் குறைந்தபட்ச தள்ளுபடி வழங்கப்படும்.

49வது சென்னை புத்தக கண்காட்சி:

இந்த புத்தகக் கண்காட்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் வருகை தருவார்கள். மேலும், ஒவ்வொரு நாளும் கருத்தரங்குகள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த புத்தகக் கண்காட்சி ஜனவரி 7ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில், அது ஜனவரி 8ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஆர். எஸ். சண்முகம், துணைத் தலைவர் நக்கீரன் கோபால், இணைச் செயலாளர் நந்தா, உதவி இணைச் செயலாளர் ஆடம் சாக்ரடீஸ் மற்றும் பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர், சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தகக் கண்காட்சியை திறந்து வைப்பார் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க: அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக.. இபிஎஸ் அறிவிப்பு

மேலும், கலைஞர் பொற்குழி விருதுகளையும் அவர் வழங்க உள்ளார். விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிற அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள் என்ன?

49-வது சென்னை புத்தகக் கண்காட்சியில் சுமார் 900 அரங்குகள் அமைக்கப்படும் எனவும், விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவு சீட்டுக் கட்டணம் வசூலிக்கப்படும்; ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச நுழைவு வழங்கப்படும்.

மேலும் படிக்க: “அதிமுக வேட்பாளராக போட்டியிட யாரையும் அணுகி ஏமாற வேண்டாம்”.. இபிஎஸ் எச்சரிக்கை!

விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை, மற்ற நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை புத்தகக் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.