எஸ்.ஐ.ஆர். பணியில் திமுக இரட்டை வேடம்…எதிர்க் கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டு!
DMK Playing Double Role In SIR: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியில் திராவிட முன்னேற்றக் கழகம் இரட்டை வேடம் போடுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கு திராவிட முன்னேற்ற கழகம் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் வாக்காளர் திருத்த பணிகளில் திமுக அதிக கவனம் செலுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் தீவிரமாக பங்கேற்பதாகவும், அதே நேரத்தில் சட்டப்பூர்வமாக எதிர்க்கும் இரு நிலைப்பாட்டை திமுக அரசு எடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தேர்தல் அதிகாரிகளால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டிய நிர்வாகப் பணியான வாக்காளர் சரிபார்ப்பில் ஆளும் திமுக தனது கட்சியினரை ஈடுபடுத்தி உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.
பூத் லெவலர் அதிகாரிகள் செயல்பாட்டில் தலையீடு
மேலும், வாக்காளர் சரிபார்ப்புக்கு பொறுப்பான பூத் லெவல் அதிகாரிகள் செயல்பாட்டில் திமுக கட்சி முகவர்கள் தலையிட்டு வருவதா எதிர்க் கட்சிகள் கூறுகின்றன. புகார்களின் அடிப்படையில் திமுக ஆதரவு பெற்ற பூத் லெவல் முகவர்களிடம் படிவங்களை ஒப்படைக்குமாறு பூத் லெவல் அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள். பல பகுதிகளில் திமுக முகவர்கள் தாங்களாகவே படிவங்களை விநியோகித்து சேகரிப்பதாகவும் கூறப்படுகிறது. சில நேரங்களில் படிவங்களை நிரப்பி தேர்தல் அதிகாரிகளிடம் அவர்கள் சமர்ப்பிப்பதாகவும் தெரிகிறது.
மேலும் படிக்க: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 + 1 தொகுதிகள் ஒதுக்கீடு? வெளியான தகவல்!!




தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பு
இது எஸ். ஐ. ஆர். பணிகளில் தி மு க அதிக ஆதிக்கம் செலுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் எதற்காக திருத்தம்
இந்திய தேர்தல் ஆணையம் சட்டத்தின் கீழ் வாக்காளர் பட்டியலை தயாரித்து திருத்துவதற்கு அதிகாரம் உள்ளது. தேர்தலுக்கு முன் அல்லது வாக்காளர் திருத்தத்தை மேற்கொள்வதற்கான தேவை ஏற்படும்போது இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், இரு இடங்களில் வாக்குரிமை, இடம்பெயர்வு, இறந்தவர்களின் பெயர்கள் ஆகியவை நீக்கப்படுகின்றன. மேலும், தகுதியுள்ள வாக்காளர்கள் எந்த வகையிலும் விடுபடாமல் இருப்பதை சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியின் நோக்கமாகும். அதே நேரத்தில் தகுதியற்ற பெயர்கள் பட்டியலில் இருப்பதை தடுப்பதும், வெவ்வேறு இடங்களில் ஒரே வாக்காளரின் பல பதிவுகளை நீக்குவதும் இதன் நோக்கங்கள் ஆகும்.
மேலும் படிக்க: கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி-யை இணைக்க ஆலோசனை? இபிஎஸ் டெல்லி பயணம்..