மழைக்கு ரெடியா மக்களே? மீண்டும் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. எங்கெல்லாம் மழை இருக்கும்?
Tamil Nadu Weather Update: குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் வரக்கூடிய அடுத்த சில தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை நிலவரம், ஜனவரி 6, 2026: பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது ஜனவரி 6ஆம் தேதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த அமைப்பு மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அடுத்த 48 மணி நேரத்தில் அதே திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொள்ளும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிற வளிமண்டல சுழற்சிகள்:
மேலும், குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் வரக்கூடிய அடுத்த சில தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு!!
8ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு:
ஜனவரி 7, 2026 (இன்று): கடலோர தமிழகத்தின் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 8 (நாளை): கடலோர தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை:
ஜனவரி 9ஆம் தேதி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோல், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பொங்கலுக்கு சிறப்பு பேருந்து.. ஜனவரி 9-14 வரை இயக்கம்.. வெளியான தமிழக அரசின் அறிவிப்பு!!
ஜனவரி 10ஆம் தேதி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடரும் கனமழை:
ஜனவரி 11ஆம் தேதி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும், பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை வேளைகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.