“முதல்வர் மீது வருத்தம் தான்”.. என்ன சொல்கிறார் செல்வப்பெருந்தகை?..
Dmk vs congress: எங்களுக்கு தேவையான தொகுதிகள் இருக்கிற பட்சத்தில், அவற்றைப் பற்றி நாகரிகமாக முக்கிய கூட்டணி கட்சியான திமுகவிடம்தான் கேட்க வேண்டும்; ஊடகத்திடம் சொல்லி ஒருவர் அதிக தொகுதிகளை வாங்க முடியாது. தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதும், தெளிவாக ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றார்.
சென்னை, ஜனவரி 07: கருத்து சொல்ல எல்லாருக்கும் உரிமை இருக்கிறது, ஆனால் அது எந்த தளத்தில் எப்படி பேசப்பட வேண்டும் என்பது முக்கியம் என செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடந்த பின், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர், தொடர்ச்சியாக அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேசி வருகிறார். இது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிக்க: “திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ஊழல்”.. ஆளுநரிடம் இபிஎஸ் பரபரப்பு புகார்!!
மாணிக்கம் தாகூரின் சொந்த கருத்து:
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தான் மாநிலத் தலைவராக இருக்கும்போது எல்லாவற்றையும் ஊடகம் முன் வெளிப்படுத்துவது தலைமைத் தன்மையல்ல என்று கூறியுள்ளார். அதேபோல், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அதிகாரப் பகிர்வு தொடர்பாக சொன்ன கருத்து அவரின் சொந்த கருத்து என்று கூறிய செல்வப்பெருந்தகை, திமுக தவிர வேறு யாரிடமும் கூட்டணி பற்றி பேசவில்லை என்று தெரிவித்துள்ளார். அதோடு, தாங்கள் திமுகவுடனேயே கூட்டணி பற்றி ஆலோசித்து வருகிறோம் என்பதை காங்கிரஸ் தேசிய பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கர் தெளிவுபடுத்தியுள்ளதையும் சுட்டிகாட்டினார்.




ஊடகத்திடம் கேட்டு அதிக தொகுதிகளை பெற முடியாது:
கருத்து சொல்ல எல்லாருக்கும் உரிமை இருக்கிறது, ஆனால் அது எந்த தளத்தில் எப்படி பேசப்பட வேண்டும் என்பது முக்கியம். எங்களுக்கு தேவையான தொகுதிகள் இருக்கிற பட்சத்தில், அவற்றைப் பற்றி நாகரிகமாக முக்கிய கூட்டணி கட்சியான திமுகவிடம்தான் கேட்க வேண்டும்; ஊடகத்திடம் சொல்லி ஒருவர் அதிக தொகுதிகளை வாங்க முடியாது. தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதும், தெளிவாக ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றார்.
இதையும் படிக்க: ஜன.9ல் “உங்க கனவை சொல்லுங்க” புதிய திட்டம் தொடக்கம்.. அமைச்சர் அன்பில் மகேஷ்
முதல்வர் மீது வருத்தம் தான்:
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை அமைச்சராக இருந்த காலத்தில் ஊழல் புகார்கள் விசாரணைக்கு வரும்போது, அதைத் தவிர்க்க எதற்காக எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றார் என்ற கேள்வி எழுகிறது. எங்கள் தலைவர்கள் முழுமையாக விசாரணைக்கு தயாராக இருக்கிறார்கள். அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கும் போது மற்றவர்களைப் பற்றி ஊழல் பேசுவது நியாயமா? என்றார். மேலும், எனக்கு உள்ள மிகப்பெரிய வேதனை என்னவென்றால் தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன், எடப்பாடி பழனிசாமி மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? இதற்கான பதில் எங்களுக்குத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.