திமுக ஆட்சியில் மக்களின் வரிப்பணம் கொள்ளை…தவெக நிர்மல் குமார்!
Tvk Nirmal Kumar Pressmeet: கடந்த 4.5 ஆண்டு கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மக்களின் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதா தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
திமுக ஆட்சியில் மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் நிர்மல் குமார் தெரிவித்தார். இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 4.5 ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு நல்லது செய்யாமல் ஆட்சி முடிவடையும் நேரத்தில் ரூ. 3 ஆயிரம் அறிவித்தது ஏமாற்று வேலை ஆகும். மக்களின் வரிப்பணத்தை திமுக அரசு கொள்ளை அடித்துள்ளது. இதனை மக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர். இதற்கான முடிவை வரும் சட்டமன்ற தேர்தலில் அறிவிப்பார்கள். தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் முற்றிலும் சரியாக அமைவதில்லை. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் சதி நிகழ்ந்துள்ளது. இதை நாங்கள் முன்பிருந்தே கூறி வருகிறோம்.
நயினார் பேசுவதை குறைக்க வேண்டும்
புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பா. ஜ. க நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அப்படி என்றால் சிபிஐ மூலமாக அவர்கள் தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து விட்டு நயினார் நாகேந்திரன் வாய்மொழியாக பேசுவதை குறைக்க வேண்டும்.
மேலும் படிக்க: தேர்தலில் எதிரி-துரோகிக்கு அப்பால் தமிழக மக்களின் நலனே முக்கியம்…டிடிவி தினகரன்!




கரூர் சம்பவத்தில் உண்மைகள் வெளிவர வேண்டும்
கரூர் சம்பவத்தில் திமுக அரசு மூடி மறைத்த அனைத்து உண்மைகளும் வெளிவர வேண்டும். திமுக அமைச்சர்கள் பல்வேறு ஊழல்களை செய்துள்ளனர். இந்த ஊழல்கள் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. திமுக அரசு கொள்ளை அடித்த பணத்தில் ஒரு சதவீதம் கூட மக்களுக்காக செலவிடப்படவில்லை. எதிர்க் கட்சியாக இருந்த போது பொங்கலுக்கு ரூ. 5000 வழங்க வேண்டும் என்று கூறிய திமுக தற்போது ஆளும் கட்சியாக இருந்து கொண்டு ரூ. 3000 மட்டுமே வழங்கி உள்ளது.
தேர்தல் கண் துடைப்புக்காக ரூ.3 ஆயிரம்
இதுவும் தேர்தல் கண் துடைப்புக்காகவே வழங்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தற்போது வரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது. இது வேண்டுமென்றே தாமதப்படுத்தும் வகையில் இருப்பதாக சந்தேகம் உள்ளது. ஏனென்றால், கடந்த டிசம்பர் 19- ஆம் தேதி தணிக்கை குழுவினர் படத்தை தணிக்கை செய்திருந்தனர். ஆனால், அதற்கான தணிக்கை சான்றிதழ் தற்போது வரை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: அமித் ஷாவுடன் எஸ்.பி.வேலுமணி 2- ஆவது நாளாக சந்திப்பு…தொகுதி பங்கீடு குறித்து பேச்சு?