கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம்… நயினார் நாகேந்திரன் பகீர் குற்றச்சாட்டு
Nainar Nagendran Speech: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) தமிழகம் தலை நிமிர, ஒரு தமிழனின் பயணம் என்ற பரப்புரையின் கடைசி நாள் நிகழ்வு புதுக்கோட்டையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) தமிழகம் தலை நிமிர, ஒரு தமிழனின் பயணம் என்ற பெயரில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அதன் கடைசி நாள் விழா புதுக்கோட்டையில் ஜனவரி 4, 2026 அன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் பாஜக தேசிய குழு உறுப்பினர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய நயினார் நாகேந்திரன், திமுக ஆட்சியை அகற்ற வேண்டுமென்றால், இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும்” என்று பாஜக தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
மேடையில் உரையாற்றிய நயினார் நாகேந்திரன், “அக்டோபர் 12, 2025 அன்று மதுரையில் தொடங்கிய இந்த அரசியல் பயணம் ஜனவரி 4, 2026 அன்று புதுக்கோட்டையில் நிறைவு பெறுகிறது. திமுக ஆட்சி எப்போது முடியும் என்று மக்கள் கோயில்களில் கண்ணீருடன் பிரார்த்திக்கிறார்கள். திமுக ஆட்சியில் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் வேதனையில் இருப்பதாகவும், போதைப்பொருள் அச்சம் எங்கும் பரவி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.




இதையும் படிக்க : உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை…. உற்சாக வரவேற்பு – அவரது திட்டம் இதுவா?
நயினார் நாகேந்திரனின் எக்ஸ் பதிவு
இன்றைய தினம் நம் “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வந்திருக்கும் மத்திய வர்த்தகம்,தொழில் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் மாண்புமிகு @PiyushGoyal அவர்களை திருச்சி விமான நிலையத்தில் வரவேற்று மகிழ்ந்தேன். pic.twitter.com/rppzDC8IcE
— Nainar Nagenthran (@NainarBJP) January 4, 2026
கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம்
மேலும் பேசிய அவர், குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனைவரும் திமுகவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். டாஸ்மாக் ஊழல் உள்ளது. பெண்களை அவமதிக்கும் விதமாக திமுக அமைச்சர்கள் பேசுகிறார்கள். குற்ற பின்னணி கொண்ட அமைச்சர்கள் ஆட்சியில் உள்ளனர். தமிழ் பண்பாட்டை திமுக மதிப்பதில்லை. கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். யாரை காப்பாற்றுவதற்காக இரவு நேரத்தில் பிரேதப் பரிசோதனை நடந்தது? செந்தில் பாலாஜியை காப்பாற்றவே இது நடந்தது. இந்த மரணங்களுக்கு காரணம் செந்தில் பாலாஜி தான்” என்று கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிக்க : அரசியல்வாதிகளுக்கு எதிரான படம்… கலைஞர் கருணாநிதி செய்த விஷயம் – நினைவுகூர்ந்த ரஜினிகாந்த்
கள்ளச்சாராய மரணங்கள், போதைப்பொருள் பரவல் ஆகியவை திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்குவதற்கு போலியான அரசியல் செய்து வருகிறார். திருப்பரங்குன்றம் சம்பவத்தில் இளைஞர் தற்கொலைக்கும் ஸ்டாலினே பொறுப்பு என்றும் அவர் கூறினார்.