Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கரூர் துயரச் சம்பவம்..”விஜய்க்கு சிபிஐ சம்மன்”.. ஜன.12ல் நேரில் ஆஜராக உத்தரவு!!

CBI summons to Vijay: கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவர் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜராகி அதிகாரிகளிடம் விசாரணைக்கு பதிலளித்து வருகின்றனர்.

கரூர் துயரச் சம்பவம்..”விஜய்க்கு சிபிஐ சம்மன்”.. ஜன.12ல் நேரில் ஆஜராக உத்தரவு!!
"விஜய்க்கு சிபிஐ சம்மன்"
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Jan 2026 14:59 PM IST

டெல்லி, ஜனவரி 06: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஜன.12ம் தேதி விஜய் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. கரூரில் செப்.27ல் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக தவெக நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோரிடம் ஏற்கெனவே சிபிஐ விசாரணை நடத்தியது. அதோடு, ஒரே நேரத்தில் டெல்லி, கரூரில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: “திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ஊழல்”.. ஆளுநரிடம் இபிஎஸ் பரபரப்பு புகார்!!

கூட்டநெரிசலில் 41 பேர் பலியான துயரம்:

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த துயரச் சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்டங்களில் விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகள், தவெக நிர்வாகிகள், கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மாவட்ட செயலாளர், கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் என பல்வேறு தரப்புகளையும் நேரில் ஆஜராக உத்தரிவிட்டு, சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் நடந்து வரும் விசாரணை:

இந்த வழக்கில் சிபிஐ தரப்பு விசாரணை மேலும் பல தரப்பினரிடம் தொடர உள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே, கரூரில் விசாரணை நடந்து வரும் அதேநேரத்தில், டெல்லியிலும் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோரை டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து 2 நாட்களாக விசாரணை நடந்தது. இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, விஜய் இடமும் சிபிஐ விசாரணை செய்யலாம் என்று கூறப்பட்டு வந்தது.

இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்… மதுரை அமர்வு பரபரப்பு தீர்ப்பு!

டெல்லி செல்வரா விஜய்?

இந்நிலையில், இவ்வழக்கில் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அரசியல் கட்சித் தலைவரை சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஜன.12ம் தேதி விஜய் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, விஜய் டெல்லி சென்று சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராவாரா? இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.