விளையாட்டு வீரர்கள் கவனத்திற்கு..! இது நம்ம ஆட்டம் 2026க்கான முன்பதிவு தொடக்கம்.. எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் உள்ளே..
Udhayanidhi Stalin: தமிழ்நாடு முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில், 16 வயது முதல் 35 வயது வரையிலான தகுதியுடைய அனைத்து இளைஞர்களும் பங்கேற்கும் வகையில், ஒன்றிய அளவிலான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு திருவிழாவில், ஒவ்வொரு பிரிவிற்கும் பரிசுத் தொகையாக ரூ. 22,50,000, வழங்கப்படும்
சென்னை, ஜனவரி 7, 2025: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படவுள்ள முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளுக்கான இணையதள முன்பதிவை தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு (FG) திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘உலகம் உங்கள் கையில்’ – மடிக்கணினி வழங்கும் திட்டம்:
இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெறும் வகையில் “உலகம் உங்கள் கையில்” என்ற அறிவூட்டும் கருப்பொருளின் கீழ், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 20 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பின்படி, இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு!!
பரிசுத் தொகை விவரங்கள்
இந்த விளையாட்டு திருவிழாவில், ஒவ்வொரு பிரிவிற்கும் பரிசுத் தொகையாக ரூ. 22,50,000, வழங்கப்படுவதுடன், மொத்தமாக ரூ. 20,48,34,000 பரிசுத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போட்டிகள் மற்றும் பங்கேற்பு விவரங்கள்
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, SDAT நடத்தவுள்ள முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளுக்கான இணையதள முன்பதிவினை இன்று தொடங்கி வைத்தோம்.
🏅தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய, மாவட்ட அளவில் தடகளம், வாலிபால், கேரம், கயிறு… pic.twitter.com/DCL92AANeO
— Udhay – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) January 6, 2026
தமிழ்நாடு முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில், 16 வயது முதல் 35 வயது வரையிலான தகுதியுடைய அனைத்து இளைஞர்களும் பங்கேற்கும் வகையில், ஒன்றிய அளவிலான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் முதல் இடம் பெறும் வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர்.
ஒன்றிய & மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
- தடகளம் – 100 மீட்டர் ஓட்டம்
- குண்டு எறிதல்
- கபாடி
- வாலிபால்
- கேரம்
- கயிறு இழுத்தல்
- ஸ்ட்ரீட் கிரிக்கெட்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு போட்டிகள்
மாவட்ட அளவில்,
- ஓவியம், கோலப் போட்டிகள்
- உடல்சார் மாற்றுத்திறனாளிகளுக்கு – 100 மீட்டர் ஓட்டம்
- பார்வைசார் மாற்றுத்திறனாளிகளுக்கு – குண்டு எறிதல்
- அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு – 100 மீட்டர் ஓட்டம்
- செவிசார் மாற்றுத்திறனாளிகளுக்கு – 100 மீட்டர் ஓட்டம்
- என 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
மாநில அளவிலான போட்டிகள்
- மாவட்ட அளவில் முதலிடம் பெறும்
- பெண்களுக்கான கபாடி அணி
- ஆண்களுக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட் அணி ஆகிய அணிகளுக்கு மட்டும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இணையதள முன்பதிவு விவரங்கள்
இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளில் பங்கேற்க விரும்பும் 16 முதல் 35 வயது வரையிலான வீரர், வீராங்கனைகள், www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in என்ற இணையதளங்கள் மூலம் 6.1.2026 முதல் முன்பதிவு செய்து, தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் பங்கேற்கலாம். முன்பதிவிற்கான கடைசி நாள்: 21.1.2026 ஆகும்.
முன்பதிவை விளையாட்டு வீரர்கள், தாங்களாகவோ, பள்ளி / கல்லூரி மூலமாகவோ, கிராம ஊராட்சி அல்லது மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாகவோ, மேற்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையம் – வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. தொலைப்பேசி என்: 9514 000 777