திண்டுக்கல்லில் ரூ. 1,595 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்.. இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..
CM MK Stalin Visit To Dindigul: முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் 1,111 முடிவுற்ற பணிகள், 212 புதிய திட்டப் பணிகள் என மொத்தம் ரூ. 1,595 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன.
திண்டுக்கல், ஜனவரி 7, 2026: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஜனவரி 7, 2026 தேதியான இன்று காலை 10 மணிக்கு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டியும், மொத்தம் ரூ. 1,595 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கள ஆய்வில் முதல்வர் ஸ்டாலின்:
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து வருகிறார். அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் சாலை வழி பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து மனுக்களையும் பெற்றுவருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, 2026-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இதற்காக, பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பணமும், பொங்கல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “முதல்வர் மீது வருத்தம் தான்”.. என்ன சொல்கிறார் செல்வப்பெருந்தகை?..
திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 1,595 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்:
அந்த வகையில், தற்போது முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் 1,111 முடிவுற்ற பணிகள், 212 புதிய திட்டப் பணிகள் என மொத்தம் ரூ. 1,595 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன.
மேலும் படிக்க: அரசியல் கட்சிகள் கூட்டங்கள், ரோடுஷோ.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..
மேலும், 30,000 பேருக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள், 1,02,000 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன், அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட உள்ள புதிய பேருந்துகளையும் கொடியசைத்து, மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சரின் வருகையை ஒட்டி அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.