Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஏஐ ஒருபோதும் மனிதனுக்கு மாற்று இல்லை… லேப்டாப் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்து பேச்சு

Free Laptop Scheme : தமிழ்நாட்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உலகம் உங்கள் கையில் என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், ஏஐ ஒரு போதும் மனிதனுக்கு மாற்று இல்லை என பேசினார்.

ஏஐ ஒருபோதும் மனிதனுக்கு மாற்று இல்லை… லேப்டாப் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்து பேச்சு
லேப்டாப் திட்டத்தை துவங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Jan 2026 20:01 PM IST

சென்னை, ஜனவரி 5 : தமிழக அரசு சார்பில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் (Laptop) அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் முதற்கட்டமாக 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு உலகம் உங்கள் கையில் என்ற பெயரில் ஜனவரி 5, 2026 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்த இலவச லேப்டாப் திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ, மருத்துவம், விவசாயம், சடடக்க கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.  இந்த லேப்டாப்பில் பெர்ப்லெக்ஸிட்டி ப்ரோ ஏஐ 6 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

‘பொய்யான பெருமைகளில் தேங்கி நிற்க மாட்டோம்’

இந்த நிலையில் நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  இதுபோன்ற நிகழ்வுகளை நாம் ஏன் நடத்துகிறோம் என்றால், மாணவர்களை வளர்த்தால் மட்டுமே மாநிலமும் நாடும் வளர்ச்சி அடையும். இன்றைய காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி அடைந்து, அனைவரின் கைகளிலும் வந்துள்ளது. அந்த தொழில்நுட்பத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பது திமுக அரசின் கடமை என்றார். 

இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின்

 

இதையும் படிக்க : அமித் ஷாவுடன் எஸ்.பி.வேலுமணி 2- ஆவது நாளாக சந்திப்பு…தொகுதி பங்கீடு குறித்து பேச்சு?

மேலும் பேசிய அவர், “நாங்கள் 20 லட்சம் மடிக்கணினிகளை வழங்க உள்ளோம். இது ஒரு பரிசு அல்ல. இது உங்களுக்கான வாய்ப்பு. இது செலவு அல்ல, எதிர்காலத்திற்கான முதலீடு.  திமுக ஒரு அறிவுசார் இயக்கம். அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இயக்கம். வரும் காலம் தொழில்நுட்ப யுகமாக இருக்கும் என்பதை உணர்ந்த தலைவர் கலைஞர், தகவல் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்கினார். தமிழர்கள் நம் பழமையைப் பற்றி பெருமை பேசுவோம். ஆனால் பொய்யான பெருமைகளில் தேங்கி நிற்க மாட்டோம். உங்கள் திறன், பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனை வளர்ந்தால் மட்டுமே தொழில்நுட்பமும் வளரும் என்றார். 

‘ஏஐ மனிதனுக்கு மாற்று இல்லை’

நெருப்பையும் சக்கரத்தையும் கண்டுபிடித்த பின் மனிதன் அதிலேயே திருப்தி அடைந்திருந்தால், இன்று விண்வெளி வரை சென்றிருக்க முடியாது. இளைஞர்கள் உயர்ந்த இலக்குகளை நோக்கி செல்ல வேண்டும். அனைவரின் நலனையும் உறுதி செய்ய வேண்டும். அதுதான் எனது ஆசை.  பட்டம் பெற்றால் மட்டும் போதாது. தொடர்ந்து தொழில்நுட்பத்தில் உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தினமும் புதிய துறைகள் உருவாகி வருகின்றன. தொழில்நுட்பம் அனைவரின் கைகளிலும் உள்ளது. அதைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும். 

இதையும் படிக்க : தேர்தலில் எதிரி-துரோகிக்கு அப்பால் தமிழக மக்களின் நலனே முக்கியம்…டிடிவி தினகரன்!

ஏஐ ஒருபோதும் மனிதனுக்கு மாற்று இல்லை. அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இந்த முன்னேற்றத்தை விமர்சிப்பது அறியாமை. அதை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது உங்கள் பொறுப்பு என்றார்.  இந்த மடிக்கணினியை திரைப்படங்கள் பார்ப்பதற்காக மட்டுமா பயன்படுத்தப் போகிறீர்கள், அல்லது உங்கள் முன்னேற்றத்திற்காகவா பயன்படுத்தப் போகிறீர்கள்? அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது, உங்கள் வெற்றியில் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம். எப்போதும் சொல்வதுபோல், நன்றாக படியுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். திமுக உங்களுடன் இருக்கிறது. எதையும் கவலைப்பட வேண்டாம் என்றார்.