தேரே இஸ்க் மெய்ன் படத்தின் புரமோஷனுக்காக மும்பை வந்த தனுஷ்!
Tere Ishk Mein : நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக இந்தி சினிமாவில் வெளியாக உள்ள படம் தேரே இஸ்க் மெய்ன். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. படங்களில் நடிப்பது மட்டும் இன்றி தொடர்ந்து படங்களில் இயக்கும் பணிகளிலும் பிசியாக இருக்கிறார் நடிகர் தனுஷ் (Actor Dhanush). அந்த வகையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகர் தனுஷ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். முன்னதாக நடிகர் தனுஷ் இயக்கும் படங்களில் அவர் நடித்து இருப்பார். ஆனால் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் கூட நடிகர் தனுஷ் நடிக்கவில்லை. முழுக்க முழுக்க தனது அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகம் செய்ய இந்தப் படத்தை நடிகர் தனுஷ் இயக்கி இருந்தார். தற்போது உள்ளா 2கே கிட்ஸ்களின் காதலையும் உணர்ச்சிகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
மேலும் இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் தற்போது வரை நடிகர் தனுஷ் நடிப்பில் 2 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் குபேரா. தெலுங்கு உட்பட மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையேப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனுஷின் 52-வது படமான இட்லி கடை படத்தை அவரே இயக்கி நாயகனாக நடித்து இருந்தார். ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




2025-ம் ஆண்டு மூன்றாவதாக தனுஷ் நடிப்பில் வெளியாகும் தேரே இஸ்க் மெய்ன்:
இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை தனுஷ் நடிப்பில் இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் மூன்றாவதாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் தேரே இஸ்க் மெய்ன். இந்தப் படத்தை பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராக இருக்கும் ஆனந்த் எல் ராய் இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை கிருத்தி சனோன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படம் வருகின்ற 28-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் டி54 படத்தின் ஷூட்டிங்கிள் பிசியாக நடித்து வந்த நடிகர் தனுஷ் அந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு தற்போது தேரே இஸ்க் மெய்ன் படத்தின் புரமோஷன் பணிகளுக்காக மும்பையை வந்தடைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also read… காந்தா படத்திற்கு வந்த புதிய சிக்கல்… தடை செய்யக்கோரி வழக்கு
இணையத்தில் கவனம் பெறும் தனுஷின் வீடியோ:
#Dhanush completed #D54 shoot and arrived in Mumbai for #TereIshkMein promotions..🔥 A Round-The-Clock Hardworker..👌
pic.twitter.com/KlpEi8phKs— Laxmi Kanth (@iammoviebuff007) November 11, 2025
Also read… சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்