காமெடி வெப் சீரிஸ் பார்க்கனுமா? அப்போ ஹார்ஸ்டார் ஓடிடியில் உள்ள இந்த சட்னி சாப்பாரை மிஸ் செய்யாதீர்கள்
Chutney Sambar Comedy Web Series: ஓடிடி கலாச்சாரம் தொடங்கிய பிறகு மக்களிடையே அதிக அளவில் படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளது போல இணையதள தொடர்களைப் பார்க்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு ஜானருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்பு எல்லாம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களைப் பார்க்க தவறிவிட்டார்கள் என்றால் அந்தப் படம் எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறதோ அப்போது தான் பார்க்க முடியும். ஆனால் இந்த ஓடிடி கலாச்சாரம் மக்களிடையே பெருகிய பிறகு இந்திய சினிமாவில் வெளியாகும் படங்கள் அனைத்தையும் திரையரங்குகளில் பார்க்க தவறியவர்கள் தொடர்ந்து ஓடிடியில் பார்த்துவிடுகிறார். அவர்களின் தாய் மொழியில் வெளியாகும் படங்கள் மட்டும் இன்றி மற்ற மொழிகளில் வெளியாகும் படங்களைப் பார்க்கவும் ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து படங்களை மட்டுமே பார்க்கும் ரசிகர்களுக்கு இணையதள தொடர்கள் வேறு விதமான அனுபவத்தை தொடர்ந்து அளித்து வருகின்றது. அதன்படி, காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட், க்ரைம், ஹாரர் மற்றும் த்ரில்லர் என அனைத்து பாணிகளிலும் தொடர்ந்து ஓடிடியில் இணையதள தொடர்கள் வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் தமிழில் உருவாகி கடந்த 26-ம் தேதி ஜூலை மாதம் 2024-ம் ஆண்டு ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியான இணையதள தொடர்தான் சட்னி சாம்பார். காமெடியை மையமாக வைத்து உருவான இந்த சட்னி சாம்பார் இணையதள தொடரில் நடிகர்கள் யோகி பாபு, வாணி போஜன், சந்திரன், நிதின் சத்யா, இளங்கோ குமரவேல், மைனா நந்தினி, கிரிஷ் ஹாசன், நிழல்கள் ரவி, தீபா சங்கர், மீரா கிருஷ்ணன், சம்யுக்தா விஸ்வநாதன், ஆரியன், சார்லி, மோகன் ராம், ஏஞ்சலின், கவுரியாக பிரியதர்ஷினி ராஜ்குமார், ராகேஷ் மேனன் என பலர் இந்த இணையதள தொடரில் நடித்து இருந்தனர்.
சட்னி சாம்பார் தொடரின் கதை என்ன?
ஊட்டியில் அமுதா கஃபே என்ற ஒரு பிரபலமான ஹோட்டலை நடத்தி வருகிறார் நடிகர் நிழல்கள் ரவி. இவரது ஹோட்டலில் கொடுக்கப்படும் சாம்பாருக்கு அந்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் அடிமை என்றே சொல்லலாம். மேலும் அந்த சாம்பாரின் ருசியைப் பார்ப்பதற்காகவே பல ஊர்களில் இருந்து மக்கள் அந்த ஹோட்டலுக்கு வரும் அளவிற்கு பிரபலமாக இருக்கிறது.
இப்படி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் நிழல்கள் ரவி உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகு தனது மகன் சந்திரனை அழைத்து திருமணத்திற்கு முன்பு தனக்கு ஒரு காதல் இருந்ததாகவும் அவரை சந்திக்க வேண்டும் என்பதே கடைசி ஆசை என்று கூறுவார். இதன் காரணமாக சந்திரன் அவரை தேடி சென்னைக்கு வரும் போது நிழல்கள் ரவிக்கும் அவரது காதலியான தீபா சங்கருக்கும் பிறந்த யோகி பாபுவை சந்திக்கிறார்.
Also Read… வெற்றிநடைபோடும் பைசன் காளமாடன் படம் – கொண்டாட்டத்தில் படக்குழு
அவர் ரோட்டில் வணிக்கடை வைத்து இருக்கிறார். அங்கு சட்னி தான் ஃபேமஸ். நிழல்கள் ரவி கடையில் சாம்பார் எப்படி ஃபேமசோ அதே போல யோகி பாபு கடையில் சட்னி ஃபேமஸ். யோகிபாபுவின் தாய் தீபா சொல்லிக்கொடுத்த ரெசிபிதான் அது. அவர் உயிரிழந்த பிறகும் யோகிபாபு அந்த சுவை மாறாமல் அல்லவியே கொடுத்து வருகிறார்.
இப்படி இருக்கும் சூழலில் சந்திரன் நிழல்கள் ரவி குறித்து கூறி யோகி பாபுவை அழைக்கிறார். ஆனால் அவர் செல்ல மறுக்கிறார். அதனைத் தொடர்ந்து அவரை எப்படி ஊட்டிக்கு அழைத்துச் சென்று தனது தந்தையின் இறுதி ஆசையை சந்திரன் நிறைவேற்றுகிறார் என்பதே இந்த தொடரின் கதை ஆகும்.
Also Read… திரையரங்குகளில் வெளியாகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படம்



