திரையரங்குகளில் வெளியாகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படம்
2 Years Of Jigarthanda DoubleX Movie: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கடந்த 10-ம் தேதி நவம்பர் மாதம் 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி இருந்தார். பீரியட் ஆக்ஷன் ட்ராமாவாக வெளியாகி இருந்த இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு, நவீன் சந்திரா, சத்யன், சஞ்சனா நடராஜன், ஷைன் டாம் சாக்கோ, அரவிந்த் ஆகாஷ், அஷ்ரப் மல்லிசேரி, விது, கபில வேணு, தமிழ், தேனி முருகன், பாவா செல்லதுரை, ஷீலா ராஜ்குமார், விஷ்ணு கோவிந்த், ஆதித்ய பாஸ்கர், சுஜாதா பாபு, சனந்த் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ், இன்வெனியோ ஆரிஜின் ஆகிய நிறுவனங்களின் கீழ் தயாரிப்பாளர்கள் கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன் சந்தானம். எஸ்.கதிரேசன், அலங்கார பாண்டியன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் கதை என்ன?
இந்தப் படத்தில் காட்டில் யானைகளை கொலை செய்து தந்தங்களை திருடி விற்கும் நபராக இருக்கிறார் சட்டாணி என்ற நபர். இவரது செயலை தடுப்பதற்காக காவல்துறை அதிகாரியாக வரும் ரத்ன குமார் சட்டாணி குறித்தும் அவர் இருக்கும் இடத்தைக் கேட்டும் அந்த மலைவாழ் மக்களை கொடுமை செய்கிறார்.




Also Read… ஆண்ட்ரியா ஒரு அழகான சிலை… வர்ணித்து பேசிய விஜய் சேதுபதி!
இந்த மலைவாழ் கிராமத்தில் பிறந்த மலையரசியை திருமணம் செய்த மதுரையை சேர்த பெரிய ரௌடி அல்லியன் அந்த மக்களை பாதுகாக்க முயற்சிக்கிறார். ஆனால் அல்லியனை கொலை செய்வதற்காக காவல்துறை அதிகாரிகளால் அனுப்பப்பட்ட ராய் தாசன் அல்லியனின் செயலைக் கண்டு அவர் மீது மரியாதை ஏற்படுகிறது.
இந்த யானைகள் கொலை மற்றும் அல்லியனுக்கு எதிரான செயல் என அனைத்திற்கும் அரசுதான் கரணம் என்று அறிந்துகொண்டு அல்லியன் எவ்வளவு நல்லவர் என்பதைக் காட்ட முயற்சிக்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… அனுராக் காஷ்யப் நடிப்பில் Unkill_123 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!