Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அனுராக் காஷ்யப் நடிப்பில் Unkill_123 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

Unkill_123 First Look Poster: பாலிவுட் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராகவும் வலம் வருகிறார் அனுராக் காஷ்யப். இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி கதாப்பாத்திரதில் நடிக்க உள்ள படம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அனுராக் காஷ்யப் நடிப்பில் Unkill_123 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
Unkill_123Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Nov 2025 16:09 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் டார்லிங். இந்தப் படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்தை இயக்குநர் சாம் ஆண்டன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்த டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ஹாரர் காமெடி பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த டார்லிங் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரே இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சாம் ஆண்டன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு, 100, கூர்க்கா, ட்ரிக்கர் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். மேலும் கடந்த 2024-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான பட்டி என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்க உள்ள அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Unkill_123 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது:

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வருகின்றது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பலப் படங்களை தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் Unkill 123. இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். இயக்குநர் சாம் ஆண்டன் இந்தப் படத்தை இயக்க உள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… அமேசான் ப்ரைம் வீடியோவில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய க்ரைம் த்ரில்லர் சீரிஸ் தஹாத்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் படத்தின் டைட்டில் இதுதான் – அப்டேட் இதோ