பிக்பாஸில் துஷாரை தொடர்ந்து இன்று வெளியேறப்போவது இவரா? வைரலாகும் தகவல்
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த 5-வது வார இறுதியில் இரண்டு எவிக்ஷன்கள் நடைப்பெற்றுள்ளது. அதன்படி நேற்று சனிகிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து துஷார் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று யார் வெளியேற உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி தொடங்கி பல நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் வைல்கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வந்த பிறகு சற்று ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பிக்பாஸை இத்தனை நாட்களாக நெகட்டிவாக விமர்சனம் செய்து வந்தவர்கள் கூட தற்போது இதனைப் பார்க்க நன்றாக இருக்கிறது என்றும் தெரிவித்து வந்தனர். அதற்கு காரணம் கடந்த வாரம் தொடக்கத்திலேயே நாமினேஷன் ப்ராசஸ் ஓபன் நாமினேஷனாக நடைப்பெற்றது. இது போட்டியாளர்களுக்கு பிடித்ததோ இல்லையோ பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தது. வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் அந்த வாரம் தான் உள்ளே வந்தார்கள் என்பதால் அவர்கள் 4 பேரையும் நாமினேட் செய்ய முடியாது என்று பிக்பாஸ் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த நாமினேஷன் ப்ராசஸில் மொத்தம் 12 போட்டியாளர்கள் நாமினேட் ஆகினர்.
இந்த 12 போட்டியாளர்களில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். மேலும் கடந்த வாரம் முழுவதும் ஹோட்டஸ் டாஸ்க், சீக்ரெட் டாஸ்க் மற்றும் ப்ராங் என்று பரபரப்பாக சென்றது பிக்பாஸ் நிகழ்ச்சி. அதனைப் பார்த்த ரசிகர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது இந்த வாரம் பார்ப்பதற்கு என்றும் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்த வார இறுதிக்கான எவிக்ஷன் ப்ராசசில் டபுள் எவிக்ஷன் என்று தகவல்கள் வெளியானது.
பிக்பாஸில் துஷாரை தொடர்ந்து இன்று வெளியேறப்போவது இவரா?
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் 6-வது நபராக துஷார் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் இன்று 7-வதாக பிரவீன் ராஜ் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் கசிந்து வைரலாகி வருகின்றது. இந்த செய்தியைப் பார்த்த ரசிகர்கள் ஆட்டமே ஆடாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களை விட்டுவிட்டு நன்றாக விளையாடும் பிரவீனை வீட்டை விட்டு அனுப்புவது நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளுவது போல உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read… கீதா கைலாசத்தின் வித்யாசமான நடிப்பில்… அங்கம்மாள் படத்தின் டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day35 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/fjvyGY7xAh
— Vijay Television (@vijaytelevision) November 9, 2025
Also Read… வெளியான சிலமணி நேரத்திலேயே 2.5 மில்லியன் பார்வைகளைக் கடந்தது தளபதி கச்சேரி பாடல்!



