Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வானம் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா? 5 ஆண்டுகளை நிறைவு செய்தது சூர்யாவின் சூரரைப் போற்று படம்

5 Years Of Soorarai Pottru Movie : நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சூரரைப் போற்று. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வானம் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா? 5 ஆண்டுகளை நிறைவு செய்தது சூர்யாவின் சூரரைப் போற்று படம்
சூரரைப் போற்றுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Nov 2025 15:30 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 12-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியான படம் சூரரைப் போற்று. கொரோனா காலக்கட்டம் என்பதால் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Director Sudha Kongara) எழுதி இயக்கி இருந்தார். நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருத இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி  நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மோகன் பாபு, பரேஷ் ராவல், பூ ராமு, ஊர்வசி, கருணாஸ், விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார், காளி வெங்கட், பிரகாஷ் பெலவாடி, வினோதினி வைத்தியநாதன், அச்யுத் குமார், ஆர்.எஸ். சிவாஜி, டான் தனோவா, ஜி.ஞானசம்பந்தன், ராமச்சந்திரன் துரைராஜ், சூப்பர் குட் சுப்ரமணி, விசாலினி, பிரியா பிரின்ஸ், ஆர்.ஜே.ஆனந்தி, இலன், கசண்ட்ரா, இயல், சோமசேகர், உடுமலை கலாம், மிர்ச்சி செந்தில் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான 2D எண்டர்டெயின்மென்ட் மற்றும் சீக்யா எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் குனீத் மோங்கா ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

சூரரைப் போற்று படத்தின் கதை என்ன?

ஒரு ரயில் வசதி கூட இல்லாத ஊரில் பிறந்த நடிகர் சூர்யா விமான நிலையத்தை தனது ஊரில் அமைக்க போராடுகிறார். இந்தியன் ஏர் ஃபோர்ஸில் பைலட் பணிக்கு ட்ரெய்னிங் எடுத்த சூர்யா சொந்தமாக விமான சேவை தொடங்க போராடுகிறார். அவருக்கு அவரது நண்பர்களும் உதவி செய்கிறார்கள்.

நடிகர் சூர்யாவின் இந்த முயற்சியை முறியடிக்க வில்லன்கள் ஒரு புறம் வேலை செய்துக்கொண்டிருக்கின்றனர். இந்த தடைகள் அனைத்தையும் தாண்டி நடிகர் சூர்யா எப்படி விமான சேவையை தொடங்கினார் என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படம் வெளியாகி தற்போது 5 ஆண்டுகளைக் கடந்துள்ளதைப் படக்குழு கொண்டாடி வருகின்றது.

Also Read… தேரே இஸ்க் மெய்ன் படத்தின் புரமோஷனுக்காக மும்பை வந்த தனுஷ்!

சூரரைப் போற்று படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மெய்யழகன் படத்தில் கமல் ஹாசன் பாடல் பாடியது இப்படிதான் – ஓபனாக பேசிய இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த்