Parasakthi: சிவகார்த்திகேயனின் பராசக்தி இசை வெளியீட்டு விழா எப்போது ஒளிபரப்பாகிறது..? எதில் பார்க்கலாம் தெரியுமா?
Parasakthi Audio Launch: சிவகார்த்திகேயனின் நடிப்பில் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியில் வெளியாகி காத்திருக்கும் படம்தான் பராசக்தி. இந்த படமானது மிக பிரம்மாண்ட கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், எதிர்பார்ப்பை அதிகரித்துவருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரலையாக எந்த சேனலில் ஒளிபரப்பாகிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை 24 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் இவருக்கு இறுதியாக வெளியான படம் மதராஸி (Madharaasi). இந்த படமானது எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல், குறைவான வசூலை பெற்றிருந்தது. அந்த வகையில் இவரின் நடிப்பில் 25வது திரைப்படமாக தயாராகியிருப்பதுதான் பராசக்தி (Parasakthi). இந்த படமானது வரும் 2026 ஜனவரி 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கியுள்ளார். மேலும் இதில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் (Ravi Mohan), அதர்வா (Athrvaa), ஸ்ரீலீலா (Sreeleela) மற்றும் ராணா உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் மாணவர்களின் போராட்டம் பற்றிய அதிரடி கதைக்களத்தில் தயாராகியுள்ளது.
அந்த வகையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா (Audio Launch) வரும் 2025 ஜனவரி3ம் தேதியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சன் தொலைக்காட்சியில் (Sun Tv) ஜனவரி 4ம் தேதி ஞாயிறுக்கிழமை மதியம் 3 மணியளவில் ஒளிபரப்பாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: கௌதம் கார்த்திக் ரூட் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்
பராசக்தி பட இசைவெளியீட்டு விழா ஒளிபரப்பு குறித்து வெளியான அறிவிப்பு பதிவு :
பிரம்மாண்டம் ஆரம்பம்! 🔥
பராசக்தி இசை வெளியீட்டு விழா | வரும் ஞாயிறு | பிற்பகல் 3 மணிக்கு #SunTV #Parasakthi #ParasakthiAudioLaunchOnSunTV #Sivakarthikeyan #RaviMohan #Atharvaa pic.twitter.com/nfjLAKXAYm
— Sun TV (@SunTV) December 31, 2025
இந்த பராசக்தி படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இப்படம் முதலில் 2026 ஜனவரி 14ம் தேதியில் பொங்கல் பண்டிகையோடு வெளியாகவிருந்தது. பின் சில காரணங்களால படக்குழு 2026 ஜனவரி 10ம் தேதிக்கு படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்வதாக அறிவித்துவிட்டது.
இதையும் படிங்க: டாக்ஸிக் படத்தில் நடிகை நயன்தாராவின் கதாப்பாதிரம் இதுதான் – படக்குழு வெளியிட்ட அறிவிப்பு
இந்த படத்தின் ரிலீசிற்கு ஒரு நாள் முன்புதான் தளபதி விஜய்யின் ஜன நாயகன் படமும் வெளியாகிறது. ஆதலால் இந்த படத்திற்கு எதிராக அதிக போட்டிகள் இருப்பது உறுதி. அந்த வகையில் இப்படத்தின் ரிலீசிற்கு பிறகுதான் தெரியவரும் எந்த படம் வசூலில் வெற்றிபெறும் என்று. அந்த வகையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தொடர்பான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.