தனுஷின் அந்த செயல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது – இயக்குநர் மாரி செல்வராஜ்
Director Mari Selvaraj: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் முன்னதாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தின் போது நடந்த சம்பவங்கள் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தினை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் முன்னதாக இயக்குநர் ராமிடம் உதவியாளராக பணியாற்றினார். பிறகு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். இறுதியாக இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பைசன் காளமாடன் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. கபடி வீரர் மனத்தி கனேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படதில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் எந்தப் படத்தை இயக்குவார் என்பது குறித்த தகவலுக்காக ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.




தனுஷின் அந்த செயல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது:
சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் அளித்தப் பேட்டி ஒன்றில் ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தபோதிலும், தனுஷ் சார் கர்ணன் படத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார். நான் அவரிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன், ஒரு இயக்குநராக என் மீது அவருக்கு சந்தேகம் வந்திருக்கலாம். ஆனால் படம் வெளியான பிறகு, அவர் ராம் சாருக்கு வீடியோ கால் செய்து என் வேலையைப் பாராட்டினார், அது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… அதர்வாவின் இதயம் முரளி படம் குறித்த முக்கிய அப்டேட்டை கொடுத்த தயாரிப்பாளர்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
“Even though #Dhanush sir is a big star, for #Karnan I have extracted a lot of work from him💪. He could have doubted me as an extreme director✌️. After release of the film, he asked Ram sir to come on video call & appreciated my work♥️🫶”
– #Mariselvarajpic.twitter.com/mkLUXejwWR— AmuthaBharathi (@CinemaWithAB) December 30, 2025
Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் சூரியின் மண்டாட்டி படம்… புது அப்டேட் இதோ