விஜய் சாரை இயக்கிய தருணம் மிகவும் மகிழ்ச்சிகரமானது – இயக்குநர் எச்.வினோத்
Director H Vinoth: ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் இயக்குநர் எச். வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜயை இயக்கி அனுபவம் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் எச். வினோத். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள் மக்களிடையே நடக்கும் ஏமாற்று வேலைகளை மையமாக வைத்து உருவாகி இருந்தது. டார்க் காமெடி பாணியில் வெளியான இந்தப் படத்தில் வந்த காட்சிகள் நிஜ வாழ்க்கையிலும் தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டே இருக்கின்றது. இதனை பல க்ரைம் செய்திகளில் குறிப்பிட்டு கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை, துணிவு ஆகியப் படங்களை இயக்கி உள்ளார்.
இறுதியாக இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் எச். வினோத் நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இயக்குநர் எச் வினோத் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.




விஜய் சாரை இயக்கிய தருணம் மிகவும் மகிழ்ச்சிகரமானது:
விஜய் சாரை முதல் முறையாக இயக்கியது ஒரு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். ‘ஜன நாயகன்’ தான் அவரது கடைசிப் படம் என்று அறிவித்த பிறகுதான் நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்கினோம். அதனால், இதுதான் அவரது கடைசிப் படம் என்ற எந்த அழுத்தமும் இல்லை. மேலும், படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து எந்தவிதமான சஸ்பென்ஸையும் நாங்கள் உருவாக்க விரும்பவில்லை. அவர் ஒரு காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருந்தது.
‘ஜன நாயகன்’ படத்தின் முழுப் படப்பிடிப்பும் 100 நாட்களுக்கு மேல் நீடித்தாலும், நாங்கள் விஜய் சாரை மட்டும் 84 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். எனக்கு அது, விஜய் சாரின் 84 படங்களைத் தொடர்ச்சியாகப் பார்ப்பது போல் இருந்தது என்று இயக்குநர் எச். வினோத் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தா. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
H Vinoth About #ThalapathyVijay 🎬⭐
— Directing Vijay sir for the first time was a very happy experience 😄🎥. We only started shooting after announcing that ‘Jana Nayagan’ would be his last film 🎉. So, there was no pressure that this is his final film. Also, we didn’t want to… pic.twitter.com/n5ti398c9Y
— Movie Tamil (@_MovieTamil) December 31, 2025
Also Read… ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது ஒளிபரப்பாகிறது? அப்டேட் இதோ