Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2025ல் ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த தென்னிந்திய பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா?

Celebrity Fans Mobbing Incidents 2025 : பொதுவாக சினிமா நடிகர்கள் என்றாலே அவர்களை பார்ப்பதற்கு கூட்டங்கள் கூடுவது வழக்கம்தான். அந்த வகையில் ரசிகர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கூட்டத்தின் மத்தியில் சிக்கி தவித்த தென்னிந்திய பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

2025ல் ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த தென்னிந்திய பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா?
தென்னிந்திய பிரபலங்கள்
Barath Murugan
Barath Murugan | Published: 30 Dec 2025 22:38 PM IST

சாய் பல்லவி (Sai Pallavi) : தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகியாக வலம்வருபவர் சாய் பல்லவி. இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கிவிட்டார். மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், தற்போது அனைத்து மொழி படங்ககளிலும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் அவர் இந்த 2025ம் ஆண்டில் வாரணாசியில் (Varanasi) சாமி தரிசனம் செய்ய சென்றபோது ரசிகர்களால் சூழப்பட்டிருந்தார். இதன் மூலமாக திக்குமுக்காடிய சாய் பல்லவி, அதிலிருந்து உதவியாளர்கள் உதவியால் தப்பிக்கவும் செய்தார். இவருக்கு இது முதல் தடவை அல்ல, இதுபோல் பலமுறை இவரை பார்த்து ரசிகர்கள் சூழ்ந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் ஏ.ஐ புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிய நிலையில், அதற்கு கடும் கண்டனம் வித்த்தும் இவர் பதிவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நிதி அகர்வால் (Nidhi Agarwal) :

தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து அசத்திவருபவர் நிதி அகர்வால். இவர் நடிகர் பிரபாஸின் தி ராஜா சாப் (The Raja saab) படத்தில் முக்கிய கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் இப்படத்தின் 3வது பாடல் ரிலீஸிற்காக ஹைதராபாத்தில் உள்ள லூலூ வணிக வளாகத்திற்கு சென்றிருந்தார். அந்த படத்தின் பாடல் ப்ரோமோஷனை முடித்துவிட்டு, தனது காரிற்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: 2025-ல் அதிக பார்வைகளைப் பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல்… ஜிவி பிரகாஷின் எக்ஸ் தள பதிவு

இதில் அவரை பாதுகாப்புடன்தான் காருக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. இதன் காரணமாக பலரும் நடிகை நிதி அகர்வாலை தொடுவதற்கு முயற்சி செய்துள்ளனர். இதில் அவரின் ஆடை கலந்திருந்தது. இது பின் போலீசால் வழக்கு பதிவுஇ செய்யப்பட்டிருந்தது. இந்த் 2025ல் ரசிகர்களால் நடந்த பெரும் பரபரப்பான விஷயமாக இது இருந்தது.

தளபதி விஜய் (Thalapathy Vijay) :

நடிகர் தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சமாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் தயாராகிவருகிறது. இவர் அரசியலிலும் இறங்கியுள்ள நிலையில், இவருக்கு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் என பல லட்சம்பேர் இருகிறார்கள். அந்த வகையில் இவரின் கடைசி படமான ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது.

இதையும் படிங்க: அதர்வாவின் இதயம் முரளி படம் குறித்த முக்கிய அப்டேட்டை கொடுத்த தயாரிப்பாளர்

அதை முடித்துவிட்டு, கடந்த 2025 டிசம்பர் 28ம் தேதி இரவில் சென்னை திருப்பினார். இந்நிலையில் இவரின் வருகை அறிந்து சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் பலரும் கூடினார்கள். இதனாக அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக விஜயை பத்திரமாக காரில் ஏற்றமுடிவு செய்திருந்த நிலையில், ரசிகர்களின் கூட நெரிசலில் அவர் கீழே விழுந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) :

பான் இந்திய பிரபல நாயகியாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவர் கடந்த 2025 டிசம்பர் 22ம் தேதியில் ஹைதராபாத்தில் ரசிகர் ஒருவரின் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அவரின் வருகையறிந்த ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக திரண்டது. அந்த கூட்டத்தின்போது, சமந்தாவை படதுகாப்பாக கூட்டி செல்வதற்கு பாதுகாப்பாளர்கள் இருந்தும், ரசிகர்கள் அவரை நெருங்கியுள்ளனர். மேலும் சமந்தாவை அதில் ரசிகர்கள் தொட முயற்சி செய்வதுபோன்ற வீடியோக்களும் இணையத்தில் வைரலாகிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பல நடிகைகளுக்கும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.