ரஜினிகாந்தை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? வைரலாகும் தகவல்
Director Ashwath Marimuthu: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி வரும் படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்ஷன் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த கூலி படத்தின் ஷூட்டிங் முடிந்த உடனே ஜெயிலர் 2 படத்தின் பணிகளில் ஈடுபட்டார் நடிகர் ரஜினிகாந்த். முன்னதாக தமிழ் சினிமாவில் வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக இந்த ஜெயிலர் 2 படம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது. இந்தப் படத்தில் பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இது குறித்து அவ்வபோது தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் படம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிக்க உள்ளது. முன்னதாக இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட பிறகு தற்போது அவர் படத்தில் இருந்து விலகியதால் யார் இந்த தலைவர் 173 படத்தை இயக்க உள்ளது என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.




ரஜினிகாந்தை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து?
இந்த் நிலையில் இந்த தலைவர் 173 படத்தினை முன்னதாக இயக்குநர் ராம்குமார் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு முதல் ஷூட்டிங் நடைபெறும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#AshwathMarimuthu — #Rajinikanth Next Collaboration 🤜🏼🤛🏼
— Official Announcement Janava Month
— Shooting April Month Start Plan….👏🏼
— Production By RKFI
— Big Casting loading 💫 #Thalaivar173 pic.twitter.com/WODJQwGHhW— Movie Tamil (@_MovieTamil) December 30, 2025
Also Read… 2025-ல் அதிக பார்வைகளைப் பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல்… ஜிவி பிரகாஷின் எக்ஸ் தள பதிவு