Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

45 வயது ஆண் – 20 வயது பெண்.. சூர்யா46 படத்தின் கதை இதுதான்- தயாரிப்பாளர் நாக வம்சி ஓபன் டாக்!

Naga Vamsi Reveals Suriya46 Plot: தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாக கலக்கிவருபவர்தான் சூர்யா. இவர் தற்போது தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் கதாநாயகனாக நுழைந்துள்ளார். இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா46ல் நடித்துள்ளார். இந்த படத்தின் கதை குறித்து இப்பட தயாரிப்பாளர் நாகவம்சி வெளிப்படையாக பேசியுள்ளார்.

45 வயது ஆண் – 20 வயது பெண்.. சூர்யா46 படத்தின் கதை இதுதான்- தயாரிப்பாளர் நாக வம்சி ஓபன் டாக்!
சூர்யா46 திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Dec 2025 17:49 PM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் தற்போது சூர்யா மற்ற மொழி இயக்குநர்களுடனும் இணைந்து படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமாவிலும் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் தெலுங்கில் உருவாகிவரும் திரைப்படம்தான் சூர்யா46 (Suriya46). இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 மே மாதத்தில் தொடங்கிய நிலையில், கடந்த 2025 டிசம்பர் முதல் வாரத்தில் முழுமையாக நிறைவடைந்திருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருதுபெற்ற ஜி.வி.பிரகாஷ் குமார் (GV.Prakash kumar) இசையமைக்க, சித்தாரா என்டேர்டைமென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் நாகவம்சி (Naga Vamsi) தயாரித்துவருகிறார்.

இந்த படமானது முழுமையான குடும்பம் மற்றும் காதல் கதை தொடர்பான கதைக்களமாக தயாராகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் நாக வம்சி, சூர்யா46 படத்தின் ஜானர் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தில் இணைந்த அசுரன் பட நடிகர்.. இணையத்தில் வைரலாகும் பதிவு!

சூர்யா46 படத்தின் ஜானர் குறித்து பேசிய நாகவம்சி :

சமீபத்தில் நேர்காணலில் பேசிய நாகவம்சி, அதில் “சூர்யா46 படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் கஜினி படத்தில் பாதிப்பிற்கு முன் சஞ்சய் ராமசாமியின் கதாபாத்திரம் எவ்வாறு இருக்குமோ அப்படி இருக்கும். இந்த படத்தின் ஜானரை பற்றி சொல்லவேண்டும் என்றால், ஒரு 45 வயது ஆணுக்கும், 20 வயது பெண்ணுக்கும் இருக்கும் உறவை குறிக்கும் விதத்திலான கதையில் தயார்க்கியுள்ளது.

இதையும் படிங்க: ஜன நாயகன் ஆடியோ ரிலீஸ்… திருவிழா கொண்டாட்டத்தில் மலேசியா.. விஜய் மாஸ் எண்ட்ரி!

45வயது ஆண் மற்றும் 20 வயது பெண்ணுக்கும் இடையே இருக்கும் காதல், காமெடி, ஆழமான எமோஷனல் என பல நிரப்பப்பட்ட பொறு தன்மையான கதையில் இருக்கும். இருவருக்கும் இடையே 25 வயது வித்தியாசம் இருந்தபோதிலும், இருவரும் இறுதியில் காதலிக்கிறார்களா என்பதுதான் இப்படத்தின் மைய கதையாக இருக்கும்” என அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சூர்யா46 படம் குறித்து தயாரிப்பாளர் நாகவம்சி பேசிய வீடியோ பதிவு :

இந்த் சூர்யா46 திரைப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை அடிப்படையாக கொண்டு தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படம் வரும் 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் முதல் டீசர் வரை அனைத்து அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.