Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக்பாஸில் விக்ரம் மற்றும் திவ்யா இடையே வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவது ஃப்ரீஸ் டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்ததால் வாரம் முழுவதும் லாலாலாலாவாக இருந்தது. இப்படி இருந்த வீடு தற்போது மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளது.

பிக்பாஸில் விக்ரம் மற்றும் திவ்யா இடையே வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Dec 2025 17:47 PM IST

தமிழ் சின்னத்திரையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து சண்டைகள் நடைப்பெற்றுக்கொண்டே தான் இருக்கிறது. இதில் சிலர் நேரடியாக சண்டையிட்டால் சிலர் மறைமுகமாக தாங்கள் நினைக்கும் கருத்துகளை மற்றவர்கள் மீது திணித்து சண்டையிடுவதை வழக்கமாக வைத்து இருந்தனர். அதாவது அவர்களுக்கு யார் மீதேனும் பிரச்சனை இருந்தது என்றால் அதனை நேரடியாக பேசாமல் மற்றவர்களிடம் தவறான கருத்தை தெரிவித்து அவர்களிடம் சண்டையிடத் தூண்டுவதை வழக்கமாக வைத்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் வழங்கப்பட்டது. அதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து வருகை தந்தது போட்டியாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளனர்.

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனிக்கிழமை எபிசோடில் வாரம் முழுவதும் குடும்பத்தினர் வந்தது குறித்தும் அதன் பிறகு போட்டியாளர்களின் ஆட்டம் எப்படி மாறியுள்ளது என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு வீட்டில் உள்ளவர்களும் தொடர்ந்து தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

பிக்பாஸில் விக்ரம் மற்றும் திவ்யா இடையே வெடித்த சண்டை:

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் திவ்யா மற்றும் விம்ரம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வீட்டில் வந்தவர்கள் குறித்து பேச்சு வளர திவ்யா விக்ரமிடம் உங்களது மனைவி என்று சொன்னதும் விக்ரம் மிகவும் ஆக்ரோசமாக என் மனைவியைப் பற்றி எப்படி பேசுவீர்கள் என்று தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார். இதன் கரணமாக அங்கு சண்டை அதிகறிக்கிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… தணிக்கைகுழுவின் அறிவுறுத்தல்… பராசக்தி படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பிய படக்குழு

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கர்ப்பிணிகளின் உணர்வுப்பூர்வமான வாழ்க்கை… மலையாளத்தில் இந்த ஒண்டர் உமன் படத்தை மிஸ் செய்யாதீர்கள்