Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jana Nayagan: ‘கண்ணே மணியே கண்ணிமையே’… வெளியானது ஜன நாயகன் படத்தின் 3வது பாடல்!

Chella Magale Song: தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகிவருவதுதான் ஜன நாயகன். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. அதை முன்னிட்டு தற்போது இப்படத்தின் 3வது பாடலான செல்ல மகளே என்ற லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது. இதை தளபதி விஜய் பாடியுள்ள நிலையில், ரசிகர்களிடையே ரசிக்கப்பட்டுவருகிறது.

Jana Nayagan: ‘கண்ணே மணியே கண்ணிமையே’… வெளியானது ஜன நாயகன் படத்தின் 3வது பாடல்!
ஜன நாயகன் பட 3வது பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 26 Dec 2025 18:11 PM IST

கோலிவுட் சினிமாவின் சிகரமாக இருந்துவருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் இதுவரை 68 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் இவர் தற்போது தமிழக அரசியலில் இறங்கியுள்ளார். அதன் காரணமாக தனது 69வது திரைப்படம்தான் கடைசி படம் என அறிவித்திருந்தார். அந்த வகையில் படம் ஆரம்பத்தில் தளபதி 69 (Thalapathy 69) என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தொடர்ந்து 2025 குடியரசு தினத்தன்று டைட்டில் ஜன நாயகன் (Jana Nayagan)என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் (H. Vinoth) இயக்க, கே.வி.என். ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து தளபதி கச்சேரி (Thalapathy Kacheri) மற்றும் ஒரு பேரே வரலாறு (Oru Pere varalaaru) என 2 பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இப்படத்திலிருந்து 3வாதக்காக மெலடி பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

இப்பாடலின் வரிகளை பாடல் ஆசிரியர் விவேக் (Vivek) எழுத, தளபதி விஜய் தனது குரலில் பாடியுள்ளார். இந்த “செல்ல மகளே” (Chella Magale) என்ற பாடல் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது. மேலும் இந்த பாடலின் கீழ் ரசிகர்கள் தங்களின் எமோஷ்னலான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பராசக்தி கதை திருட்டு கதையா? சிவகார்த்திகேயனுக்கு வந்த சிக்கல்.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜன நாயகன் படத்தின் 3வது பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

கேரளாவில் ஜன நாயகன் திரைப்படத்தில் முதல் நாள் முதல் காட்சி எப்போது தெரியுமா:

தளபதி விஜயின் இந்த ஜன நாயகன் திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, நரேன் மற்றும் பிரியாமணி உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். ந்த வகையில் இப்படம் கமர்சியல், ஆக்ஷன் மற்றும் எமோஷ்னலான் கதைக்களத்தில் தயாராகியுள்ளது.

இதையும் படிங்க: ஜன நாயகன் ஆடியோ லாஞ்சில் இத்தனை ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்களா? அனிருத் கொடுத்த அப்டேட்!!

இப்படம் சுமார் ரூ 400 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. அந்த வகையில் இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படமானது கேரளாவில் எப்போது வெளியாகிறது தெரியுமா? இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் கேரளாவில் காலை 4 மணி முதல் FDFS காட்சிகள் திரையிடப்படுகிறதாம்.