Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sudha Kongara: ரஜினிகாந்த் சாருடன் அந்த மாதிரியான படம் பண்ணவேணுன்னு ஆசை – சுதா கொங்கரா!

Sudha Kongara About Her Dream: தமிழ் சினிமாவில் பெண் இயக்குநராக தொடர்ந்து உண்மை சம்பவங்களை கொடுத்து படங்களை இயக்கிவருபவர் சுதா கொங்கரா. இவரின் இயக்கத்தில் தமிழில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் திரைப்படம்தான் பராசக்தி. இப்படம் வரும் 2025 ஜனவரி 10ம் தேதியில் வெளியாகிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சுதா கொங்கரா தனது ஆசை குறித்து மனம் திறந்துள்ளார்.

Sudha Kongara: ரஜினிகாந்த் சாருடன் அந்த மாதிரியான படம் பண்ணவேணுன்னு ஆசை – சுதா கொங்கரா!
ரஜினிகாந்த் மற்றும் சுதா கொங்கராImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Dec 2025 17:51 PM IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 2010ம் ஆண்டில் வெளியான துரோகி (Drohi) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் சுதா கொங்கரா (Sudha Kongara). இவரின் இயக்கத்தில் வெளியான இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த படத்தில் விஸ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் தோல்வி பின் சில ஆண்டுகளுக்கு பின் இவரின் இயக்கத்தில் வெளியான படம் இறுதிச்சுற்று (Irudhi Suttru). கடந்த 2016ம் ஆண்டில் வெளியான இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இதன் பின் சூர்யாவுடன் (Suriya) சூரரைப்போற்று என்ற திரைப்படத்தையும் இயக்கி ஹிட் கொடுத்திருந்தார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் விரைவில் வெளியாகி காத்திருக்கும் திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இப்படத்தில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) முன்னணி வேடத்தில் நடிக்க, நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்கணல் ஒன்றில் பேசிய சுதா கொங்கரா, ரஜினிகாந்துடன் படம் இயக்கும் தனது ஆசை குறித்து மனம் திறந்துள்ளார்.

இதையும் படிங்க: பராசக்தி படத்திலிருந்து இன்று மாலை வெளியாகிறது ‘வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ வீடியோ

ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க ஆசை குறித்து சுதா கொங்கரா பேச்சு :

சமீபத்தில் நேர்காணலில் பேசிய சுதா கொங்கரா, “எனக்கு முழுமையாக ஒரு காதல் கதை பண்ணனும்னு ஆசை அதிகம். அதுவும் ரஜினிகாந்த் சாரோட ஒரு லவ் திரைப்படம் இயக்கவேண்டும் என எனக்கு ரொம்ப ஆசை. நான் அவரின் தீவிர ரசிகை. எனக்கு அவருடன் முதல் மரியாதையை போன்ற படத்தை இயக்கவேண்டும் என ஆசை.

இதையும் படிங்க: இதற்கு முன்னே எந்த படத்திலும் அதுபோன்று நடிக்கவில்லை.. டாக்சிக் படம் குறித்து பேசிய ருக்மிணி வசந்த்!

என்னிடம் ஏற்கனவே அதுபோன்ற கதை இருக்கு. ஆனாலும் அந்த படத்தின் கதையை மீண்டும் பண்ணனும்னு ஆசை. மேலும் காதலை மையமாக கொண்ட ஒரு தெலுங்கு நாவலை நானா படித்தேன். அந்த நாவலை படமாக்கவேண்டும்” என்று அந்த நேர்காணலில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

பராசக்தி திரைப்படம் குறித்து சுதா கொங்கரா வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த பராசக்தி திரைப்படமானது இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த திரைப்படம். இந்த படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் வெளியாகிறது. அதன்படி இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.