2025-ல் அதிக பார்வைகளைப் பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல்… ஜிவி பிரகாஷின் எக்ஸ் தள பதிவு
Golden Sparrow Video Song | தமிழ் சினிமாவில் இந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற பாடல்களின் லிஸ்ட் பெரிது. இந்த நிலையில் இதில் யூடியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்றப் பாடலாக கோல்டன் ஸ்பேரோ உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் இந்த 2025-ம் ஆண்டு பல சூப்பர் ஹிட் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படங்கள் மட்டும் இன்றி தொடர்ந்து படங்களில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியான பாடல்கள் பல ஹூக் ஸ்டெப்ஸ்களுடன் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்த 2025-ம் ஆண்டு வெளியான பலப் பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடல்களுக்கு நடிகர்கள் எப்படி நடனம் ஆடுவார்களோ அதோ போல நடனம் ஆடி பாடல்களை ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தற்போது படங்களில் வரும் பாடல்களும் அதே போல உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டு வெளியான பலப் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் அதிக அளவில் யூடியூபில் பார்வைகளைப் பெற்று சாதனைப் படைத்தது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இருந்து வெளியான கோல்டன் ஸ்பேரோ பாடல் வீடியோ. இந்தப் படத்தை நடிகர் தனுஷ் எழுதி இயக்கி இருந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




2025-ல் அதிக பார்வைகளைப் பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல்:
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த ஆண்டு தமிழ் திரைப்படங்களில் யூடியூபில் அதிகப் பார்வையாளர்களைப் பெற்ற பாடல் கோல்டன் ஸ்பேரோ. மேலும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படக்குழுவிற்கும் எனது இயக்குநர் தனுஷ் அவர்களுக்கும் நன்றி என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி இந்த கோல்டன் ஸ்பேரோ பாடலின் யூடியூப் வீடியோ சுமார் 248 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலை பாடலாசிரியர் அறிவு எழுதி இருந்த நிலையில் பாடலை சுபலாஷினி, ஜி வி பிரகாஷ் குமார், தனுஷ், அறிவு ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர்.
Also Read… 45 வயது ஆண் – 20 வயது பெண்.. சூர்யா46 படத்தின் கதை இதுதான்- தயாரிப்பாளர் நாக வம்சி ஓபன் டாக்!
ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Highest viewed song in YouTube for Tamil films this year … thanks team #NEEK and my director @dhanushkraja … @theSreyas https://t.co/XJ5fettiQp #goldensparrow
— G.V.Prakash Kumar (@gvprakash) December 29, 2025
Also Read… Sudha Kongara: ரஜினிகாந்த் சாருடன் அந்த மாதிரியான படம் பண்ணவேணுன்னு ஆசை – சுதா கொங்கரா!