ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது ஒளிபரப்பாகிறது? அப்டேட் இதோ
Thalapathy Thiruvizha On Zee Tamil: நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்ற நிலையில் அதனை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தற்போது முடிவு செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இறுதியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ஜன நாயகன். நடிகர் விஜய் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தை பிரபல இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ளார். இது தெலுங்கு சினிமாவில் நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டு வருக் நிலையில் படத்தை திரையரங்குகளில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் இந்தப் படம் வருகின்ற ஜனவரி மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது படத்திற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது ஒளிபரப்பாகிறது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.




ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது ஒளிபரப்பாகிறது?
ஜன நாயகன் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாகவே படத்தின் உரிமைகள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில் நடைப்பெற்ற நிலையில் அதனை தற்போது இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் வருகின்ற ஜனவரி மாதம் 4-ம் தேதி 2026-ம் ஆண்டு ஒளிபரப்ப உள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர்.
Also Read… Prabhas: அதனால்தான் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை- பிரபாஸின் அதிர்ச்சியூட்டும் பதில்!
ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
One Last Time 🫶 #ThalapathyThiruvizhaOnZeeTamil
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா | ஜனவரி 4 | வரும் ஞாயிறு 4.30 PM @actorvijay @KvnProductions @anirudhofficial #HVinoth #ThalapathyThiruvizha #JananayaganAudioLaunch #Thalapathy #Vijay #ZeeTamil pic.twitter.com/O2gFSyvLfn
— Zee Tamil (@ZeeTamil) December 30, 2025
Also Read… பராசக்தி இசை வெளியீட்டு விழா குறித்த வதந்தி… தயாரிப்பாளர் வைத்த முற்றுப்புள்ளி