தமிழ் சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – நடந்தது என்ன?
Gowri Serial Star Nandhini RIP: தமிழில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் கலைஞர் டிவி. இந்த தொலைக்காட்சியில் தெய்வீக தொடராக கடந்த 2025 ஜனவரி முதல் ஒளிபரப்பப்பட்டுவரும் சீரியல்தான் கௌரி. இந்த சீரியலில் நடித்துவந்த நடிகை நந்தினி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விஷயம் தற்போது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக சினிமா மற்றும் சின்னத்திரை துறையில் நடிகைகள் நடிகர்கள் என பலரும் தற்கொலை போன்ற அதிர்ச்சிகரமான செயல்களில் ஈடுபட்டுவருகிறார்கள். அந்த வகையில் பிரபல சின்னத்திரை நடிகையாக இருந்துவருபவர்தான் நந்தினி (Nandhini). இவர் தமிழில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் கௌரி (Gowri)என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துவருகிறார். அதில் அவர் மெயின் கதாபாத்திரத்தில் நடித்துவந்தார். இதில் துர்கா (Dhurga) மற்றும் கனகா (Kanaga) என ரெட்டை வேடத்தில் நடித்துவந்தார் இவர். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பலரும் இருந்துவருகின்றன. அந்த வகையில் நேற்று 2025 டிசம்பர் 28ம் தேதியில் பெங்களூருவில் (Bengaluru) நடிகை நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து நேற்றே பரவலாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இதை சீரியல் குழுவும் உறுதி செய்துள்ளது.
எந்த காரணத்திற்காக இவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இவரின் இறப்பு தற்போது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் தங்களின் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.




இதையும் படிங்க: மீண்டும் இணைந்த ஆம்பள பட கூட்டணி.. படக்குழு வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
நடிகை நந்தினியின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நந்தினிக்கு நடந்தது என்ன :
இந்த கௌரி சீரியல் படப்பிடிப்பு ஆரம்பத்திலிருந்து பெங்களூருவில் நடைபெற்றுவந்ததுள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கும் முன்புதான் சென்னைக்கு இந்த சீரியல் ஷூட்டிங் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதலிலிருந்தே பெங்களூருவில் தங்கி ஹூட்டிங்கில் கலந்துகொண்ட நந்தினி, மேலும் சென்னையில் நடைபெற்றுவந்த ஷூட்டிங்கிற்காக வந்து வந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்
மேலும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஷூட்டிங் ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டுள்ளார். அதை தொடர்ந்து பிரேக் எடுப்பதற்காக பெங்களூரு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று 2025 டிசம்பர் 28ம் தேதியில் அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதை அவரின் சீரியல் தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது.
நடிகை நந்தினியின் பூர்வீகம் :
நடிகை நந்தினி ஆந்திராவை சேர்ந்தவர். இவர் தெலுங்கிலும் சில சீரியல்களில் நடித்திருந்த நிலையில், அதை தொடர்ந்த தமிழிலும் கௌரி என்ற சீரியலில் மையின் கதாபாத்திரமாக நடித்துவந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு பிரபலம் கிடைத்துவந்த நிலையில், தற்போது இவர் எடுத்த முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு சீரியல் குழு மற்றும் தொலைக்காட்சியும் பெரும் வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.
(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)