டிஆர்பியில் டாப் 5 இடங்களை தட்டித்தூக்கிய சன் டிவி… எந்த சீரியல் எந்த இடம் தெரியுமா?
Top 10 Tamil Serial TRP Rating: தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிக அளவில் கிடைப்பது போல தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த நிலையில் சீரியல்களின் டிஆர்பி அப்டேட்டை தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறுகிறதோ அதைவிட அதிகமாக சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கின்றது. தமிழில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி என தொடர்ந்து பல தமிழ் சேனல்களில் சீரியல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுகிறது. சீரியல் என்ற கலாச்சாரம் ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் தொடங்கி தற்போது ரசிகர்களிடையே தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் முன்பு எல்லாம் வீட்டில் உள்ள பெண்கள் தான் சீரியல் பார்க்கிறார்கள் என்று கிண்டலடிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது வீட்டில் உள்ள பெண்கள் மட்டும் இன்றி ஆண்களும் அதிக அளவில் சீரியல்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
குறிப்பாக ஸ்மார்ட் போன் கலாச்சாரம் தொடங்கிய பிறகு அனைத்து சீரியல்களும் தொலைக்காட்சியில் பார்க்கத் தவறினலு தொடர்ந்து யூடியூபில் பார்க்கலாம் என்ற ஆப்ஷன் வந்த் பிறகு சீரியல்களின் பார்வையாளர்கள் அதிகரித்தனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு சேனலும் தங்களுக்கான ஒரு ஓடிடி சேனலை நிறுவி வருவதால் அவர்களின் சீரியல்களை அந்த ஓடிடியிலேயே பார்க்கும் ஆப்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்களும் தங்களுக்குப் பிடித்த சீரியல்களை தொடர்ந்து டிவியில் பார்க்க தவறினாலும் ஓடிடியில் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஆர்பியில் டாப் 5 இடங்களை தட்டித்தூக்கிய சன் டிவி:
இந்த நிலையில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்ற நிலையில் வாரம் வாரம் டிஆர்பி வழங்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.




அதில் முதல் 5 இடத்தை சன் டிவி சீரியல்கள் பிடித்துள்ளது. அதில் குறிப்பாக மூன்று முடிச்சு சீரியல் 10.34 டிஆர்பி ரேட்டிங்கையும், சிங்கப்பெண்ணே சீரியல் 09.89 டிஆர்பி ரேட்டிங்கையும், கயல் சீரியல் 09.07 டிஆர்பி ரேட்டிங்கையும், மருமகள் சீரியல் 08.67 டிஆர்பி ரேட்டிங்கையும், எதிர்நீச்சல் 2 சீரியல் 08.57 டிஆர்பி ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.
Also Read… விஜய் சார் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது – நடிகை பூஜா ஹெக்டே
தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியல் 08.42 டிஆர்பி ரேட்டிங்கையும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அன்னம் சீரியல் 08.39 டிஆர்பி ரேட்டிங்கையும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் 08.00 டிஆர்பி ரேட்டிங்கையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் – 7.79 டிஆர்பி ரேட்டிங்கையும் பெற்றுள்ள நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லமே செல்லமே சீரியல் 6.64 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… பிக்பாஸில் விக்ரம் மற்றும் திவ்யா இடையே வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ!