பிக்பாஸில் ஓபன் நாமினேஷன் என்ற பெயரில் திவ்யா மீது இருந்த வன்மத்தை கொட்டிய விக்ரம் – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் 12 வாரங்கள் முடிவடைந்து தற்போது 13-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் 13-வது வாரத்திற்கான நாமினேஷன் நடைப்பெற்றது வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்று 85-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 12-வது வாரம் முடிவடைந்து தற்போது 13-வது வாரத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலை போட்டியாளர்கள் இடையே போட்டியும் வழுத்துள்ளது. மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அதன்படி கடந்த வாரம் நடந்த எவிக்ஷன் ப்ராசசில் டபுள் எவிக்ஷன் நடைப்பெற்றது. அதில் சனி கிழமை அமித் பார்வம் பிக்பாஸ் வீட்டை விட்டு எவிக்டாகி வெளியேறிய நிலையில் அதனைத் தொடர்ந்து ஞாயிறு அன்று கனி திரு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளது குறிப்பிப்பிடத்தக்கது.
இன்னும் சில நாட்களில் ஃபைனல்ஸ் வர உள்ளதால் அடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃபினாலே மற்றும் பணப்பெட்டி டாஸ்க் ஆகியவை நடைபெற உள்ளது. இதில் யார் டிக்கெட் டூ ஃபினாலே வெற்றிப் பெறுகிறார்கள் என்பது குறித்து பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும். தொடர்ந்து பிக்பாஸில் வைக்கப்படும் பணப் பெட்டியை யார் எடுக்கப் போகிறார்கள் என்பதையும் பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.




நாமினேஷன் பெயரில் திவ்யா மீது இருந்த வன்மத்தை கொட்டிய விக்ரம்:
இந்த நிலையில் தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த 13-வது வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைப்பெற்றது. அதில் ஓபன் நாமினேஷனாக நடைப்பெற்ற போது விக்ரம் திவ்யாவை நாமினேட் செய்துள்ளார். அப்போது திவ்யா மீது இருந்த மொத்த வன்மத்தையும் கொட்டினார். இது நாமினேஷன் ப்ராசசா அல்லது வன்மத்தை கொட்டும் ப்ராசசா என்பது போல இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… அமித்தை தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவது இவர்தான் – கசிந்தது தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day85 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/btMgnmtbKn
— Vijay Television (@vijaytelevision) December 29, 2025
Also Read… அனிருத், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ குறித்து விஜய் சொன்ன சுவாரஸ்ய விசயம்… என்ன தெரியுமா?