Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமித்தை தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவது இவர்தான் – கசிந்தது தகவல்

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 84 நாட்களைக் கடந்துள்ளது. இந்த நிலையில் இன்று 16-வது போட்டியாளராக யார் பிக்பஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அமித்தை தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவது இவர்தான் – கசிந்தது தகவல்
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Dec 2025 11:10 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 12-வது வாரம் முடிவை எட்டியுள்ளது. அதன்படி இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 84-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் வைல்கார்ட் போட்டியாளர்களுடன் இணைந்து மொத்தம் 24 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய போது போட்டியாளராக கலந்துக் கொண்ட ஆதிரை மூன்றாவதாக வெளியேற்றப்பட்டார். அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் வைல்கார்ட் போட்டியாளராக வந்து மீண்டும் எவிக்டாகி வெளியே சென்றார். இந்த நிலையில் இதுவரை பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் வரை 13 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அமித் பார்கவ் 15-வது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்களே உள்ளனர்.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் 84-வது நாளிற்கான வீடியோ வெளியாகி உள்ளது. தற்போது 10 போட்டியாளர்களே உள்ள நிலையில் இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் நடைபெறுகின்றது. இதுவரை பிக்பாஸில் மூன்று முறை டபுள் எவிக்‌ஷன் நடைப்பெற்று உள்ள நிலையில் தற்போது 4-வது முறையாக டபுள் எவிக்‌ஷன் நடைபெறுகின்றது. இதில் முன்னதாக அமித் பார்கவ் வெளியேறிய நிலையில் இன்று யார் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

16-வது போட்டியாளராக வெளியேறுவது இவர்தான்:

அதன்படி பிக்பாஸி தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இன்று வீட்டை விட்டு யார் வெளியேற வேண்டும் யார் இருக்க வேண்டும் என்று சாண்ட்ரா மற்றும் கனி இருவரையும் குறித்து மற்றப் போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பப்படுகின்றது. அதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கனி இருக்கவேண்டும், சாண்ட்ரா செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் மக்களின் முடிவு என்ன என்று விஜய் சேதுபதி காட்டுகிறார். அதில் சாண்ட்ரா இந்த வார எவிக்‌ஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். கனி வெளியேற்றப்படுவது தெரிகிறது.

Also Read… பிக்பாஸில் பார்வதியை பங்கமாக கலாய்த்த விக்ரம் அம்மா… வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவிற்காக மலேசியா புறப்பட்ட விஜய் – வைரலாகும் வீடியோ