AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IndvsSA : நான் ஆட்டத்தை மாற்றப்போவதில்லை… விமர்சனங்களுக்கு பதிலளித்த அபிஷேக் சர்மா

T20 World Cup 2026 : சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், அபிஷேக் சர்மா மீண்டும் தனது பழைய அதிரடி ஃபார்முக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.இந்த நிலையில் இது தொடர்பாக அவர் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Feb 2026 18:29 PM IST
டி20 உலகக்கோப்பை போட்டிகள் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான அபிஷேக் சர்மாவிற்கு இதுவரை மிகவும் சவலானா தொடராக இருந்து வருகிறது. உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களில் முதலிடத்தில் இருப்பவராக மதிப்பிடப்பட்டுள்ள அவர் இதுவரை ஒரு ரன்கள் கூட எடுக்காமால் தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட் ஆகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

1 / 5
லீக் போட்டிகளில் தொடர்ந்து ரன்கள் எடுக்காமல் வெளியேறிய அபிஷேக் சர்மாவின் ஷாட் தேர்வு மற்றும் திறன் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அவர் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2 / 5
இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட வீடியோவில் பேசிய அபிஷேக் சர்மா, நான் பேட்டிங் செய்வதை எப்பொழுதுமே ரசித்து செய்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அழுத்தத்தை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டேன். என் கட்டுப்பாட்டில் இருப்பதை மட்டுமே நான் கவனிக்கிறேன். பயிற்சி மற்றும் போட்டிக்கான தயாரிப்பில் கவனம் செலுத்துவது தான் முக்கியம் என்றார்.

3 / 5
மேலும் பேசிய அவர், ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் சாதாரணமானவை. சில போட்டிகளில் ரன்கள் வரும், சில நேரங்களில் வராது என்பதே கிரிக்கெட்டின் இயல்பு என்றார்.

4 / 5
எந்த சூழ்நிலையிலும் நான் என் ஆட்டத்தின் அணுகுமுறையை மாற்றப்போவதில்லை என முடிவு செய்துள்ளேன். எல்லா போட்டிகளிலும் முடிவு சாதகமாக இருக்காது. ஆனால் என் நோக்கத்தையும் விளையாட்டுக்கான செயல்முறையையும் மாற்றமாட்டேன் என்றார்.

5 / 5
Follow Us