ஜீ 5 ஓடிடியில் வெளியான பராசக்தி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Parasakthi Movie OTT Review: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான பராசக்தி படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் கடந்த 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவரது தம்பியாக நடிகர் அதர்வா முரளி நடித்து இருந்தார். மேலும் நடிகை ஸ்ரீ லீலா அதர்வாவின் தோழியாகவும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் காவல்துறை அதிகாரியாக அரசிற்கு விசுவாசம் உள்ள நபராக அதற்காக மக்களுக்கு எதிராக என்ன வேணும்னாலும் செய்யும் ஒரு வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிகர் ரவி மோகன் நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது மக்களிடையே ரவி மோகனின் நடிப்பு பாராட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பராசக்தி படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஜீ 5 ஓடிடியில் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் கலவையான விமர்சனம் பெற்ற இந்த பராசக்தி படத்தை ஓடிடியில் பார்த்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
ஜீ 5 ஓடிடியில் வெளியான பராசக்தி படம் எப்படி இருக்கு?
1959-ம் ஆண்டு கல்லூரியில் சிவகார்த்திகேயன் படித்துக்கொண்டிருக்கும் போது இந்தியை மத்திய அரசு ஆட்சி மொழியாக சட்டம் இயற்ற உள்ளதாக அறிவித்ததை எதிர்த்து புறநானூற்றுப்படை என்ற அமைப்பின் கீழ் போராட்டத்தில் ஈடுபடுகிறார். இந்தப் போராட்டத்தில் மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரயில் ஒன்றை எரிக்கின்றனர். அதில் சிவகார்த்திகேயனின் உயிர் நண்பன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டங்களை விட்டுவிட்டு தனது அப்பாவின் வேலையான ரயில்வே துறையில் வேலை செய்து வருகிறார்.




இவரது தம்பி அதர்வா எஞ்சினியரிங் படித்துக்கொண்டு இருக்கும் போதே இந்தி திணிப்பை எதிர்த்து போராடி வருகிறார். மேலும் பதவி உயர்விற்காக இந்தி கற்றுக்கொள்ளும் சிவகார்த்திகேயனுக்கு வேலை கிடைக்காமல் போகிறது. தொடர்ந்து தம்பியை போராட்டத்தின் போது காவல்துறையினர் தாக்குவதை தடுக்கிறார் சிவகார்த்திகேயன்.
அதனைத் தொடர்ந்து தம்பிக்கு ஆதரவாக போராட்டத்தில் களமிறங்கும் சிவகர்த்திகேயன் தனது புறநானூற்றூப் படையை மீண்டும் கொண்டு வருகிறார். இந்த புறநானூற்றுப் படையின் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட ரவி மோகன் அவர்களை பழி வாங்குவதற்காக தேடி வந்த நிலையில் சிவகர்த்திகேயனை கண்டுபிடிப்பதற்காக அதர்வாகை சுடச் சொல்கிறார்.
Also Read… சர்வம் மாயா வெற்றியைத் தொடர்ந்து அதிரடி படத்தில் இணைந்த ரியா ஷிபு… வைரலாகும் போஸ்டர்
போராட்டத்தில் அதர்வாவை காவல்துறையினர் சுட்ட போது சிவகார்திகேயன் வருகிறார். அவரை பிடித்த ரவி மோகன் சித்ரவதை செய்யும் நிலையில் காவல்துறையில் இருந்த மற்றொரு அதிகாரி சிவகார்த்திகேயனை தப்பிக்க வைக்கிறார். இப்படி இருந்த நிலையில் அதர்வா சிவகார்த்திகேயனை கண்டுபிடித்தாரா? சிவகர்த்திகேயனின் மொழிப் போராட்டம் வெற்றிப் பெற்றதா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… ஜன நாயகன் படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பியது படக்குழு!