Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இது கனா 2 படத்திற்கான நேரம்… இணையத்தில் கவனம் பெறும் ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவு

உலக கோப்பை மகளிர்கான போட்டியில் இந்திய பெண்கள் அணி உலக கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி வரும் நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்துப் பதிவில் ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன விசயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இது கனா 2 படத்திற்கான நேரம்… இணையத்தில் கவனம் பெறும் ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவு
சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Nov 2025 22:29 PM IST

இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். ஆம் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய பெண்கள் அணி வென்றுள்ளனர். இதனை இந்தியாவே கொண்டாடி வருகின்றது. இந்த வெற்றியை மக்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் கொண்டாடி வருகின்றது. அதன்படி தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவில் உள்ள பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் தங்களது வாழ்த்துகளை எக்ஸ் தள பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் நடிகர் சிவகார்த்திகேயன் வரை பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவிற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பதில் இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

அதன்படி அந்தப் பதிவில் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள்! ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, அருண்ராஜா காமராஜ் இதை கனா மூலம் வெளிப்படுத்தினார் – இது பெண்கள் கிரிக்கெட்டைப் பற்றிய முதல் படமும் எனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமும் ஆகும். இந்த வெற்றி உண்மையிலேயே சிறப்பு வாய்ந்ததாக உணர வைக்கிறது என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்தப் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இது கனா 2 படத்திற்கான நேரம் என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கனா படத்தில் நினைத்தது தற்போது நிஜமாகவே நடந்துவிட்டது:

அதன்படி இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் பெண்களின் கிரிக்கெட்டை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான படம் கனா. ஒரு விவசாயின் மகளான ஐஸ்வர்யா ராஜேஷ் சிறு வயதில் இருந்தே தனது தந்தைக்கு கிரிக்கெட்டில் இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து தான் ஒரு கிரிக்கெட்டராக ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

கிராமத்தில் விவசாயியின் மகளாக பிறந்த பெண் பல தடைகளைத் தாண்டி எப்படி இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடினார் என்பதே படத்தின் கதை. இதைப் போலவே தற்போது இந்திய பெண்கள் அணி வெற்றிப் பெற்று இருப்பது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… நவம்பர் 14-ம் தேதி ரீ ரிலீஸாகும் ஆட்டோகிராஃப் படம் – சேரன் வெளியிட்ட அப்டேட்

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நாளை மாலை வெளியாகிறது பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ