Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

DC: லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் டிசி படம்.. சிறப்பு வேடத்தில் லப்பர் பந்து பட நடிகை?

DC Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ஹீரோவாக டிசி என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

DC: லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் டிசி படம்.. சிறப்பு வேடத்தில் லப்பர் பந்து  பட நடிகை?
டிசி திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 08 Nov 2025 17:08 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களை வைத்து திரைப்படங்கள் இயக்கியிருப்பவர்தான் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவர் கடந்த 2017ம் ஆண்டு வெளியான மாநகரம் (Maanagaram) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தார். இந்த படம் இவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில், நடிகர் கார்த்தியின் (karthi) நடிப்பில் வெளியான கைதி (Kaithi) என்ற படத்தின் மூலம் இவர் மக்களிடையே பிரபலமானார். இந்த படத்தி வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயின் (Thalapathy Vijay) மாஸ்டர், கமல்ஹாசனின் (Kamal Haasan) விக்ரம் மற்றும் மீண்டும் தளபதி விஜயுடன் லியோ என தொடர்ந்து மாஸ் நடிகர்களின் கூட்டணியில் திரைப்படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியிருந்தது. அந்த வகையில் இவர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) கூட்டணியில் இறுதியாக வெளியான படம்தான் கூலி (Coolie). இப்படத்தின் வெற்றியை அடுத்ததாக தற்போது ஹீரோவாக களமிறங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் (Arun Matheswaran) இயக்கத்தில், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் டிசி (DC) என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி நடிக்கும் நிலையில், மேலும் லப்பர் பந்து பட நடிகை ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நடிகை வேறு யாருமில்லை, நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்திதான். இவர் டிசி படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது, இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸ் சூப்பர் ஹிட்.. வெற்றியைக் கொண்டாடிய காந்தாரா சாப்டர் 1 படக்குழு!

லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படம் தொடர்பாக வெளியான பதிவு :

இந்த டிசி திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துவரும் நிலையில், ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படமானது ஒரு கேங்ஸ்டர் தொடர்பான கதைக்களத்தில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகை வாமிகா கபி, விலைமாது வேடத்தில் நடித்துவருகிறாராம்.

இதையும் படிங்க: சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025 டிசம்பர் அல்லது, 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் நிச்சயமாக லோகேஷ் கனகராஜிற்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படங்கள்

இந்த டிசி படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியுடன் கைதி 2 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரிக்க, அனிருத் தான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்ததாக அஜித் குமாருடன் ஒரு படத்தில் லோகேஷ் கனகராஜ் இணைவதாக கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. உண்மையானால் விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.