400 ஓட்டுகளில் சில்க்கை வென்றேன் – எஸ்.வி.சேகர் பகிர்ந்த போட்டோ – எதில் தெரியுமா?
SVe Shekhar Silk Smitha Photo : மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பிரபல நடிகர் எஸ்.வி.சேகர், சுமார் 400 ஓட்டில் நான் ஜெயித்த போட்டி என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமா ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத பெயர் சில்க் ஸ்மிதா. அவர் மறைந்து 30 ஆண்டுகளுக்கும் மேலானாலும் ஏதோ ஒரு வகையில் ரசிகர்களால் நினைவு கூறப்பட்டு வருகிறார். சில்க் ஸ்மிதா வெறும் கவர்ச்சி நடிகையாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் தனது தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். இந்த நிலையில் பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் சில்க் ஸ்மிதா குறித்து வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சில்க் ஸ்மிதாவை ஜெயித்த கதை
மறைந்த மநடிகை சில்க் ஸ்மிதாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், சுமார் 400 ஓட்டில் நான் ஜெயித்த போட்டி. மிக நேர்மையாக பரிசுப்பணத்தை கொடுத்து அனுப்பிய சில்க் என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் வார இதழில் வந்த செய்தியையும் அவர் பகிர்ந்திருந்தார். அதில், இது ஒரு சவால் போட்டோ. துபாயில் மோகினியுடனும் ரோகிணியுடனும் தனித்தனியாய் நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பார்த்த சில்க் ஸ்மிதா என்னிடம், உங்களின் சிரிப்பு, மகிவும் செயற்கையாக இருக்கிறது” என்றார்.
இதையும் படிக்க : Coolie: இன்னுமா என்ன தெரியல.. ஓராண்டை கடந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி… படக்குழு வெளியிட்ட பதிவு!
எஸ்.வி.சேகரின் எக்ஸ் பதிவு
சுமார் 400 ஓட்டில் நான் ஜெயித்த போட்டி. மிக நேர்மையாக பரிசுப்பணத்தை கொடுத்து அனுப்பிய சில்க். pic.twitter.com/RDpHE7hlZX
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) August 13, 2026
அதற்கு பதிலளித்த நான்”நாம் ரெண்டு பேரும் சேர்ந்து சிரிக்கின்ற மாதிரி ஒரு போட்டோ எடுத்துக்கொள்வோம். யாருடையது இயற்கையாக இருக்கிறது என போட்டி வைப்போம். உங்களுடையய சிரிப்பு இயற்கையாக இருக்கிறது என்றால், நீங்கள் பரிசைக் கொடுத்துவிடுங்கள். என்னுடையது வென்றால் போட்டி நடத்துகிறற பத்திரிகை பணம் கொடுக்கட்டும்.” என்றேன். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்தார். இது குறித்து அவர் தனது பதிவில், சுமார் 400 ஓட்டில் நான் ஜெயித்த போட்டி. மிக நேர்மையாக பரிசுப்பணத்தை கொடுத்து அனுப்பிய சில்க் என நினைவு கூர்ந்தார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : சூர்யாவின் பிரசன்னமும்.. மமிதாவின் குறும்பும்.. பேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும் விஸ்வநாத் & சன்ஸ் எப்படி இருக்கு?
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் புகழின் உச்சியில் இருந்தவர் சில்க் ஸ்மிதா. நடிகையாக அறிமுகமாவதற்கு முன் ஆடை வடிவமைப்பு மற்றும் ஒப்பனைக் கலையில் திறமை பெற்றிருந்த அவர், அதையே தனது தொழிலாகவும் செய்து வந்தார். இந்த நிலையில் புகழின் உச்சியில் இருக்கும்போதே யாரும் எதிர்பார்க்காத வகையில் உயிரை மாய்த்துக்கொண்டார். ஆனால் அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை மர்மமாகவே இருந்து வருகிறது.



