Coolie: இன்னுமா என்ன தெரியல.. ஓராண்டை கடந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி… படக்குழு வெளியிட்ட பதிவு!
One Year Of Coolie: லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், தமிழில் கடைசியாக வெளியானதிரைப்படம் கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது திரைப்படமாக வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இன்றுடன் (14/08/2026) இந்த திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான ஸ்பெஷல் பதிவை படக்குழு பகிர்ந்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநராக இருந்த்துவருபவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (SuperStar Rajinikanth) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றியிருந்த திரைப்படம்தான் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நாகார்ஜுனா (Nagarjuna), உபேந்திர ராவ், ஆமிர்கான் (Aamir Khan) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நாயகர்கள் இணைந்து நடித்திருந்தனர். ஒரு வித்தியாசமான ஆக்ஷன் மற்றும் பேமிலி கதைக்களத்தில் இந்த திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.
பான் இந்திய மொழிகளில் வெளியான இப்படத்திற்கு முதல் நாள் சிறப்பான எதிர்பார்ப்பு இருந்த நிலையில், விமர்சனங்கள் ரீதியாக சில அடிகள் சறுக்கியது. இருந்தபோதிலும் ரூ 400 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இன்று 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியோடு, இப்படம் வெளியாகி 1 ஆண்டு நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான ஸ்பெஷல் பதிவை சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: சூர்யாவின் பிரசன்னமும்.. மமிதாவின் குறும்பும்.. பேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும் விஸ்வநாத் & சன்ஸ் எப்படி இருக்கு?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு படக்குழு வெளியிட்ட பதிவு:
Celebrating one year of #Coolie 💥 Here is an unseen still of Deva!#1YearofCoolie@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial pic.twitter.com/fUxXvPJDFp
— Sun Pictures (@sunpictures) August 14, 2026
இந்த கூலி படத்தில் ரஜினிகாந்துடன், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, ஆமிர்கான், உபேந்திரராவ், ஷோபின் ஷாஹிர் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது ஒரு கேங்ஸ்டர்களால் கடத்தப்படும் விலையுயர்ந்த வாட்ச் மற்றும் அதனால் நடக்கும் கலவரங்கள் மற்றும் கொலையை மையமாக கொண்ட ஒரு வித்தியாசமான கதையில் உருவாக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: இசையமைப்பில் அழுத்தம் இருக்கிறதா? – விளக்கமாக பேசிய அனிருத்!
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், அதில் வெளியான மோனிகா பெல்லூஜி பாடல் இன்றளவிலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இதில் பூஜா ஹெக்டே தனது சிறப்பான நடனத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜின் புது திரைப்படம்:
லோகேஷ் கனகராஜ் தற்போது ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் டிசி என்ற படத்தில் நடித்துள்ள நிலையில், திரையரங்குகளில் சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இதையடுத்து அல்லு அர்ஜுனின் நடிப்பில் AA23 என்ற படத்தை இயக்குகிறார். ரஜினிகாந்தும் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, தற்போது அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் தர்மன் என்ற படத்தில் நடித்துவருகிறார்.