தர்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு
Dharman movie first look making video | தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் தர்மன். இந்தப் படத்தின் தொடக்க விழா நேற்று நடைப்பெற்றது. இந்த நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உருவான வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வருடத்திற்கு ஒரு படமாவது திரையரங்குகளில் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உடன் தனது 173-வது படத்திற்காக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்துள்ளார். நடிகர் கமல் ஹாசன் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். முன்னதாக இந்தப் படத்திற்கு இரண்டு இயக்குநர்கள் பேசப்பட்ட நிலையில் மூன்றாவதாக அஸ்வத் மாரிமுத்து இறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




தர்மன் பட ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு:
இந்த நிலையில் தலைவர் 173 படத்திற்கு தர்மன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றது. மேலும் அந்த விழாவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த், சிம்ரன், ராஷி கன்னா ஆகியோர் உடன் படத்தின் தயாரிப்பாளர் கமல் ஹாசன் மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உடன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அந்த போஸ்டர் உருவான வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… 4 ஆண்டுகளை நிறைவு செய்தது விஜய் சேதுபதியின் மாமனிதன் படம்
தர்மன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
THE OG SWAG 🕶️#Dharman
The Making of the First Look#KettaPaiyanSir#SuperstarRajinikanth #KamalHaasan@rajinikanth @ikamalhaasan #Mahendran @Dir_Ashwath @anirudhofficial @anbariv @iYogiBabu @SimranbaggaOffc #RaashiKhanna @nikethbommi #KarthikRajkumar @PradeepERagav… pic.twitter.com/VtJbo7ggTg— Raaj Kamal Films International (@RKFI) June 25, 2026
Also Read… விஷாலுக்காக அவன் இவன் படத்தில் இயக்குநர் பாலா எடுத்த முக்கிய முடிவு – நடிகர் ஆர்யா ஓபன் டாக்