AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Prabhas: திருமண பேச்சில் மீண்டும் சிக்கிய பிரபாஸ்.. பொண்ணு யார் தெரியுமா?

Prabhas Wedding Update: தெலுங்கு சினிமாவில் உச்ச நாயகனாக ஹிட் படங்களை கொடுத்துவருபவர் பிரபாஸ். இவருக்கு 46 வயதை கடந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்த விதத்தில், தற்போது இவர் திருமண தகவல்கள் குறித்து இணையத்தை புதிய பேச்சு அடிபடுகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Prabhas: திருமண பேச்சில் மீண்டும் சிக்கிய பிரபாஸ்.. பொண்ணு யார் தெரியுமா?
பிரபாஸ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Jul 2026 18:08 PM IST

தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் பிரபாஸ் (Prabhas). இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவரும் நிலையில், தொடர்ந்து பான் இந்திய படங்களில் பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்பட தி ராஜா சாப் (The Raja Saab). கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகியிருந்த இப்படமானது, திரையரங்குகளில் கலவியான் விமர்சனங்களை பெற்றிருந்தது. இவ்வாறு கலவையான விமர்சனங்களை சந்தித்திருந்தாலும் சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இப்படத்திற்கு பின் அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவின் (Sundeep Reddy Vanga)இயக்கத்தில் ஸ்பிரிட் (Spirit) என்ற படத்திலும், சீதா ராமம் பட இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஃபௌசி (fouzi) என்ற படத்திலும் நடித்துவருகிறார்.

நடிகர் பிரபாஷின் திருமணம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவரும். முன்பு அவர் ஒரு நடிகையை திருமணம் செய்வதாக கூறப்பட்டது, பின் வேறு ஒரு சினிமா பிரபலத்தின் மகளை திருமணம் செய்வதாக கூறப்பட்டது. தற்போது அதுபோல மீண்டும் பிரபாஸின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அரசன் படத்தில் இசையமைக்காதது ஏன்? விளக்கம் கொடுத்த சந்தோஷ் நாராயணன்!

ஸ்பிரிட் திரைப்படம் குறித்து இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

மீண்டும் திருமண பேச்சில் சிக்கிய பிரபாஸ் :

சமீபகாலமாக பிரபாஸின் திருமணம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது. இவர் பிரபலமான தொழிலதிபர் ஒருவரின் மகளை திருமணம் செய்யவுள்ளாராம், அவருக்காக பல்வேறு விஷயங்களை பிரபாஸ் செய்துள்ளாராம். குறிப்பாக ரூ 200 கோடி மதிப்பிலான வீடு ஒன்றை நடிகர் பிரபாஸ் கட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: அதர்வாவின் இதயம் முரளி படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதா? மக்களின் விமர்சனம் இதோ

இந்த முறை வதந்தியா? அல்லது உண்மையா?:

நடிகர் பிரபாஷின் திருமண குறித்து முன்பெல்லாம் பல தகவல்கள் வெளியாகியிருந்தது. அதெல்லம் வதந்திகளாகவே முடிந்தது. இந்த முறையும், பிரபாஷின் திருமணம் குறித்து பரவிவரும் தகவல் உண்மையா? அல்லது வழக்கம்போலவே பொய்யா? என தெரியவில்லை. இது உண்மையானால் இது பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என ஏதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்களும் விரைவில் எப்போது பிரபாஸ் திருமணம் குறித்த நல்ல செய்தியை சொல்வார் இணையத்தளங்களில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Follow Us