பிக்பாஸில் கம்ருதின் குறித்து புறணி பேசும் பார்வதி மற்றும் சாண்ட்ரா – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 87 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைப்பெற்று வருகின்ற நிலையில் போட்டியாளர்கள் அதில் கவனம் செலுத்து வருகின்றனர்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் காதல் பறவைகளாக வலம் வந்தவர்கள் கம்ருதின் மற்றும் பார்வதி. இவர்களின் அட்டகாசத்தை தாங்க முடியவில்லை என்று ரசிகர்களும் போட்டியாளர்களும் கமெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. முன்பு எல்லா சீசன்களிலும் லவ் ட்ராக் என்பது மிகவும் இயல்பானதாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சீசனில் லவ் ட்ராக் என்பது பார்ப்பவர்களை எரிச்சல் அடைய செய்யும் விதமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி காதல் பறவைகளாக சுற்றித் திரிந்த கம்ருதின் மற்றும் பார்வதி கடந்த வாரம் நடைப்பெற்ற ஃப்ரீஸ் டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் உள்ளே வந்து சென்ற பிறகு இவர்களின் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சண்டை ஏற்பட்டு தற்போது அடிதடி வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைப்பெற்றது. இந்த டாஸ்கில் கம்ருதின் மற்றும் பார்வதி இடையே போட்டி அதிகமாக இருந்தது. அதிலும் குறிப்பாக ஒரு கட்டத்தில் கம்ருதின் மற்றும் பார்வதி இருவரும் இடையே கைகலப்பு ஏற்படுவதும் நேற்றைய எபிசோடில் தெரிந்தது. மேலும் இருவரும் ஒரே நேரத்தில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது கம்ருதின் மகிழ்ச்சியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸில் கம்ருதின் குறித்து புறணி பேசும் பார்வதி, சாண்ட்ரா:
இந்த நிலையில் இன்று 87-வது நாளிற்கான புரோமோ வீடியோவை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் சாண்ட்ராவிடம் பார்வதி கம்ருதினின் செயல்கள் குறித்து புறணி பேசுகிறார்கள். அதில் இப்படி பழகினோம் என்று எந்த எண்ணமும் இல்லாமல் கம்ருதின் செயல் மிகவும் மோசமாக இருக்கிறது என்று சாண்ட்ராவிடம் பேசுகிறார். அது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ரஜினிகாந்தை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? வைரலாகும் தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day87 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/sXyiF5DtP3
— Vijay Television (@vijaytelevision) December 31, 2025
Also Read… டிக்கெட் டூ ஃபினாலே 2 டாஸ்கில் சண்டையிடும் கம்ருதின் மற்றும் பார்வதி… வைரலாகும் பதிவு