பராசக்தி அந்த மாணவரின் வாழ்க்கை கதை இல்லை – இயக்குநர் சுதா கொங்கரா
Director Sudha Kongara: தமிழ் சினிமாவில் தற்போது ரசிகரக்ளிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் பராசக்தி. இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலான நிலையில் இதுகுறித்து இயக்குநர் சுதா கொங்கரா பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் படம் பராசக்தி. இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படமும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ளார். இது நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாக உள்ள 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ லீலா நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகம் ஆகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்காக அவர் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டு டப்பிங் பேசியுள்ளார் என்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த பராசக்தி படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும் இது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியாகும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகின்ற 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இசை வெளியீட்டு விழா ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா படம் குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




பராசக்தி அந்த மாணவரின் வாழ்க்கை கதை இல்லை:
பரசக்தி திரைப்படம் நிஜ வாழ்க்கை மாணவரான ராஜேந்திரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது அல்ல. மேலும், கிளைமாக்ஸில் சிவா இறக்கப் போகிறாரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். என்னால் எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியாது.
இது சூரரைப் போற்று போல, நிஜ சம்பவங்களின் புனைவுப்படுத்தப்பட்ட பதிப்பாகும். இந்தி எதிர்ப்பு என்பது ஒரு பின்னணி மட்டுமே. கதை முற்றிலும் வேறுபட்டது. இது இரண்டு சகோதரர்களைப் பற்றியது என்று சுதா கொங்கரா அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Also Read… பராசக்தி படத்திலிருந்து இன்று மாலை வெளியாகிறது ‘வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ வீடியோ
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#SudhaKongara in a Recent Interview ⭐:
• #Parasakthi is not based on the life of Real life student Rajendran.. And You should watch the film to know whether siva is gonna die in the climax or not.. I cannot reveal everything.. 😀
• It’s a Fictionalized version of real… pic.twitter.com/q1VaEASEbr
— Laxmi Kanth (@iammoviebuff007) December 29, 2025
Also Read… சூர்யா 46 படம் இப்படிதான் உருவானது… இயக்குநர் வெங்கி அட்லூரி சொன்ன விசயம்