Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டிக்கெட் டூ ஃபினாலே 2 டாஸ்கில் சண்டையிடும் கம்ருதின் மற்றும் பார்வதி… வைரலாகும் பதிவு

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது டாஸ்கில் கம்ருதின் மற்றும் பார்வதி இடையே சண்டை ஏற்படுகின்றது.

டிக்கெட் டூ ஃபினாலே 2 டாஸ்கில் சண்டையிடும் கம்ருதின் மற்றும் பார்வதி… வைரலாகும் பதிவு
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Dec 2025 11:16 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தற்போது 86-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் பிக்பாஸில் தற்போது 9 போட்டியாளர்கள் உள்ளனர். மொத்தம் 24 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து எவிக்டாகி வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் போட்டி சூடு பிடித்துள்ள நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தற்போது வீட்டில் உள்ள 9 போட்டியாளர்கலும் நாமினேஷனில் இடம் பிடித்துள்ளனர். இதில் யார் வெளியேறுவார்கள் என்பது இந்த வார இறுதியில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த டாஸ்க் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று 85-வது நாள் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் 1 நடைப்பெற்றது. இதில் சுபிக்‌ஷா வெற்றிப் பெற்றார். இந்த டாஸ்கில் முதலாவதாக வெளியேறிய சாண்ட்ராவிற்கு எந்த மதிப்பெண்ணும் வழங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து வெளியேறிய சபரிக்கு 2 பாய்ண்ட்ஸ் கொடுக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து வெளியேறியவர்களுக்கு ஒவ்வொரு மதிப்பெண் அதிகமாக கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் டூ ஃபினாலே 2 டாஸ்கில் சண்டையிடும் கம்ருதின்:

இந்த நிலையில் இன்று 86-வது நாள் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் 2 நடைபெறும் வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. இந்த டாஸ்கில் கம்ருதின் மற்றும் பார்வதி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் இருவரும் அவர்களுகுள் இருக்கும் வன்மத்தை கக்கிக்கொள்வது வீடியோவைப் பார்க்கும் போது தெரிய வருகின்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் ஓபன் நாமினேஷன் என்ற பெயரில் திவ்யா மீது இருந்த வன்மத்தை கொட்டிய விக்ரம் – வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பராசக்தி அந்த மாணவரின் வாழ்க்கை கதை இல்லை – இயக்குநர் சுதா கொங்கரா