நியூ இயர் ஸ்பெஷல்… போஸ்டர்களை வெளியிடும் டாப் நடிகர்களின் படக்குழு
New Year special Posters: இன்று உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் தொடர்ந்து சினிமா தொடர்பான புதுப் புது அப்டேட்களும் வெளியாகி வருகின்றது. அதன்படி தென்னிந்திய சினிமாவில் வெளியாக உள்ள புதுப் படங்களின் போஸ்டர்கள் என்னென்ன என்று தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி அவ்வபோது படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது போல நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கிங்ஸ்டன் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தற்போது உருவாகி வருகின்றது. அதில் ஒன்றுதான் ஹேப்பி ராஜ். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை ஹேப்பி ராஜ் படக்கு வெளியிட்டுள்ளது.
ஹேப்பி ராஜ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
WE’RE READY 2026 ⚡ 😎
Happy Raj wishes you a wonderful year filled with good vibes ♥️A @justin_tunes Musical 🎵@gvprakash #MariaElanchezian @actorabbas @srigouripriya #GeorgeMaryan @kailasam_geetha @jaivarda04 @SureshJaikanth @madhandop… pic.twitter.com/trmV1c2LuV
— Saregama South (@saregamasouth) January 1, 2026
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராக வலம் வருகிறார். இவர் மற்ற நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதன்படி நடிகர் செல்வராகவன் நடிப்பில் உருவாகி உள்ள மனிதன் தெய்வமாகலாம் என்ற படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
நடிகர் செல்வராகவன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A new frame. A deeper story. Music that moves souls 🎬🎼#HappyNewYear2026 From all of us at Team #ManithanDeivamagalam @selvaraghavan @dennisfilmzone @VyomEntOfficial #VijayaSathish @KusheeRavi #Kausalya #YGeeMahendran @mimegopi #RSSatiz #AKPrriyan @Ravivarmarvdop @DeepakDFT… pic.twitter.com/5dRvdzWjEW
— selvaraghavan (@selvaraghavan) January 1, 2026
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் அதர்வா முரளி. இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் இதயம் முரளி. இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி வருகிறார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம். இந்த நிலையில் இதயம் முரளி என்ற படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
இதயம் முரளி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Sometimes, it’s the journey that matters more than the destination ❤️
Team #IdhayamMurali wishes you a very happy new year@Atharvaamurali @MusicThaman @AakashBaskaran @natty_nataraj @PreityMukundan @JustNiharikaNm @11Lohar @manojdft @Dop_Sai @RakshanVJ @Actor__SUDHAKAR… pic.twitter.com/ZxHH9iusUc
— DawnPictures (@DawnPicturesOff) January 1, 2026
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் தி பாரடைஸ். இந்தப் படத்தின் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
Also Read… என்னங்க நடக்குது பிக்பாஸ் வீட்டில்… மீண்டும் இணைந்த கம்ருதின் பார்வதி – கடுப்பாகும் சாண்ட்ரா
தி பாரடைஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Welcome to 2026 aka JADAL ZAMANA ❤🔥
Happy New Year ✨#TheParadise in cinemas 26th March, 2026.
Releasing in Telugu, Hindi, Tamil, Kannada, Malayalam, Bengali, English, and Spanish.
Natural Star @NameisNani in an @odela_srikanth cinema ❤️🔥
An @anirudhofficial musical 🎼… pic.twitter.com/EOPtz4uzG4— SLV Cinemas (@SLVCinemasOffl) January 1, 2026
Also Read… கௌதம் கார்த்திக் ரூட் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்



