Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என்னங்க நடக்குது பிக்பாஸ் வீட்டில்… மீண்டும் இணைந்த கம்ருதின் பார்வதி – கடுப்பாகும் சாண்ட்ரா

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 13-வது வாரம் சென்று கொண்டிருக்கின்றது. மேலும் இந்த சீசனில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைப்பெற்று வரும் நிலையில் தற்போது புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

என்னங்க நடக்குது பிக்பாஸ் வீட்டில்… மீண்டும் இணைந்த கம்ருதின் பார்வதி – கடுப்பாகும் சாண்ட்ரா
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jan 2026 13:35 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தொடர்ந்து பல சர்ச்சைகளும் சண்டைகளும் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து போட்டியாளர்களிடையே சண்டைகள் நடைப்பெற்று வந்தது. மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 13-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த டாஸ்கில் மொத்தம் 5 முடிவடைந்துள்ளது. அதில் முதலாவது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் சுபிக்‌ஷா வெற்றியடைந்தார். மேலும் இரண்டாவது டாஸ்கில் சாண்ட்ரா, மூன்றாவது டாஸ்கில் விக்ரம் மற்றும் நான்காவது டாஸ்கில் சபரி வெற்றிப் பெற்ற நிலையில் 5-வது டாஸ்கில் பார்வதி வெற்றிப் பெற்றது நேற்றைய எபிசோடில் தெரியவந்தனது. இதனைத் தொடர்ந்து இந்த டாஸ்க் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கம்ருதின் மற்றும் பார்வதியின் ரிலேஷன்ஷிப் தொடர்பான விசயங்களும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி இந்த நிகழ்ச்சியில் காதல் பறவைகளாக வலம் வந்த பார்வதி மற்றும் கம்ருதின் இருவாரின் செயல்களும் தொடர்ந்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் இந்த வார தொடக்கத்தில் சண்டையிட்டுக்கொண்டு இருந்த நிலையில் தற்போது தொடர்ந்து மீண்டும் அவர்கள் இருவரும் இணைவது போல காட்டப்பட்டு வருகின்றது.

பிக்பாஸில் மீண்டும் இணைந்த கம்ருதின் பார்வதி:

இந்த நிலையில் பார்வதி மற்றும் கம்ருதின் இடையே சண்டை வந்த போது பார்வதி உடன் இருந்த சாண்ட்ரா அவரைப் பார்த்துக்கொண்டார். அப்போது பார்வதி சாண்ட்ராவிடம் கம்ருதின் குறித்து புறணி பேசிவிட்டு தொடர்ந்து தற்போது கம்ருதின் உடன் இணைந்ததும் சாண்ட்ரா பேசியது அனைத்தையும் கம்ருதினிடம் பேசி பார்வதி போட்டுக்கொடுக்கிறார். இதனால் சாண்ட்ராவிடம் கம்ருதின் சண்டையிடுகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… விஜய் சாரை இயக்கிய தருணம் மிகவும் மகிழ்ச்சிகரமானது – இயக்குநர் எச்.வினோத்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அஸ்வத் – சிம்பு படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்