Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக்பாஸ் வீட்டில் இது செலிபிரேஷன் வீக் இல்லை… சண்டை வீக் – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் 13 வாரங்கள் முடிவடைந்து தற்போது 14-வது வாரம் நடைப்பெற்று வருகின்றது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் செலிபிரேஷன் வாரம் நடைப்பெற்று வருவதால் முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்குள் சென்று கொண்டு இருக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இது செலிபிரேஷன் வீக் இல்லை… சண்டை வீக் – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 06 Jan 2026 18:34 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 13 வாரங்கள் முடிவடைந்து 14-வது வாரத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இறுதிக்கட்டத்தில் மொத்தம் 6 போட்டியாளர்கள் போட்டியில் உள்ளனர் அதன்படி டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வெற்றிப் பெற்ற அரோரா உட்பட சபரி, சாண்ட்ரா, திவ்யா, விக்ரம் மற்றும் வினோத் ஆகியோர் இறுதிப் போட்டியில் உள்ளனர். இந்த நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று  இந்தப் போட்டியில் பல எதிர்பாராத விசயங்கள் நடைப்பெற்றது. அதன்படி இந்தப் போட்டியில் இருந்து முதல் வாரம் முடிவதற்கு முன்னதாகவே போட்டியாளர் நந்தினி போட்டியை விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து கம்ருதின் மற்றும் பார்வதி இருவரும் அத்துமீறி நடந்துகொண்ட காரணத்தால் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த 14-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் பணப் பெட்டி டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. இதுவரை இல்லாத அளவிற்கு பிக்பாஸ் வீட்டில் புதிய முறையில் இந்த பணப்பெட்டி டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் பணப் பெட்டி டாஸ்க் ஒருபுறம் இருக்க பிக்பாஸ் வீட்டில் செலிபிரேஷன் வாரன் என்று முன்னாள் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று கொண்டு இருக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இது செலிபிரேஷன் வீக் இல்லை… சண்டை வீக்:

இந்த வாரம் செலிபிரேஷன் வாரமாக இல்லாமல் முன்னாள் போட்டியாளர்கள் தங்களது குறைகளை கூறும் வாரமாக உள்ளது. கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி தற்போது சண்டைகள் அதிகரித்து காணப்படுகின்றது. தங்கள் மனதில் இருக்கும் வன்மங்களை போட்டியாளர்கள் மாறிமாறி கொட்டிக்கொள்வது வீடியோவாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Rishabh Shetty: ஜன நாயகன் ட்ரெய்லர் ஃபயர்… பராசக்தி ட்ரெய்லர் அற்புதம் – பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அமேசான் ப்ரைம் வீடியோவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது பகவந்த் கேசரி