படிக்கும்போது என்ன பண்ணுறாரு பாருங்க.. அஸ்வத் மாரிமுத்து குறித்த தர்மன் பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை பகிர்ந்த ராஷி கண்ணா!
Raashii Khanna Shares Dharman Shooting Video: தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து புது புது படங்களில் நடித்துவருபவர் ராஷி கண்ணா. இவர் தற்போது ரஜினிகாந்தின் தர்மன் திரைப்படத்திலும் முக்கிய நாயகியாக இணைந்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக நடித்துவருபவர் ராஷி கண்ணா (Raashii Khanna). இவர் தமிழில் இறுதியாக நடித்திருந்த படம் அகதியா (Agathya) (2025). இப்படத்தில் ஜீவாவுடன் (Jiiva) முக்கியமான வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். என்னதான் இவர் தற்போது தமிழில் நாயகியாக நடித்து பிரபலமானாலும், இவருக்கு முதல் முதலில் ரசிகர்களிடையே நெருக்கமான ஈர்ப்பை கொடுத்த படம் இமைக்கா நொடிகள் (Imaikkaa Nodigal). கடந்த 2018ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இதன் வெற்றியை தொடர்ந்த இவருக்கு தமிழில் புது புது படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தது. இந்த வரிசையில் தற்போது தமிழில் இவர் நடித்துவரும் புதிய திரைப்படம்தான் தர்மன் (Dharman).
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth), தலைவர் 173 (Thalaivar173)படமாக கூறப்பட்ட இப்படத்தை, ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில், இதன் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட வீடியோவை நடிகை ராஷி கண்ணா பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: சூர்யா 47 படத்தின் ஷூட்டிங் நிலவரம் என்ன? வைரலாகும் தகவல்
தர்மன் பட ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட வீடியோவிய பகிர்ந்த ராஷி கண்ணா:
அந்த வீடியோவில் நடிகை ராஷி கண்ணா மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இருவரும் இடம்பெற்றுள்ளனர். அதில் ராஷி கண்ணா, புத்தகத்தை படித்துக்கொண்டிருக்குபோது, இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இடையூறு செய்யும் விதத்தில் இந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவில், ராஷி கண்ணா “எனது இயக்குநர் நான் படிக்கும்போது என்ன செய்கிறார் என பாருங்க” என அதில் நகைச்சுவையாக கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ, ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: பத்து ஆண்டுகளுக்கும் மேலாகியும்.. இன்னும் குறும்புக்காரர்களாகவே இருக்கிறோம் – விஷாலுடனான நட்பு குறித்து அஞ்சலி நெகிழ்ச்சி பதிவு!
தர்மன் படத்தின் ரிலீஸ் எப்போது:
இந்த தர்மன் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கிறார். இதில் அவர் டாக்டராக நடிக்கும் நிலையில், அவரின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. இதில் டாக்டராகவும், அதிரடி ஆக்ஷன் நாயகனாகவும் ரஜினி நடிக்கிறாராம். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்கவுள்ளாராம். மேலும் இப்படத்தை கமல் தயாரிக்க, அனிருத் இசையமைத்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையின் தொடங்கியுள்ள நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்படத்தை வரும் 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



