ஒரு புதிய பயணம் தொடங்குகிறது… சூர்யா 48 படம் குறித்து இயக்குநர் வெளியிட்ட பதிவு
Director TJ Gnanavel about suriya 48 movie | தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ஜெய் பீம் படத்தின் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. இது குறித்து இயக்குநர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் டி.ஜே. ஞானவேல். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான படம் கூட்டத்தில் ஒருத்தன். காமெடி ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் டி.ஜே.ஞானவேல். அதனைத் தொடர்ந்து இரண்டாவது படம் முதல் படத்திற்கு நேர் எதிராக மிகவும் சீரியசான கதையை மையமாக வைத்து எடுத்து இருந்தார். கஸ்டோடியல் டெத் என்ற ஒரு உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கிய படம் தான் ஜெய் பீம்.
இந்தப் படத்தில் நடிகர்கள் சூர்யா, மணிகண்டன் மற்றும் லிஜோமோல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கிய வேட்டையன் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




சூர்யா 48 படத்திற்காக அன்பும், நன்றியும்:
இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா உடன் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி வைத்துள்ளார் இயக்குநர் டி.ஜே.ஞானவேல். ஹோமபல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 48-வது படத்தை இயக்குநர் டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்க உள்ளார். இந்தப் படமும் ஒரு உண்மை கதையை மையமாக வைத்து உருவாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நேற்று 29-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு இந்த சூர்யா 48 படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடிக்க உள்ள நிலையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… தமிழ் கடவுளான முருகனாக நடிக்கும் நடிகர் ஜூனியர் என்டிஆர்
இயக்குநர் டி.ஜே.ஞானவேல் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A new journey begins,
அன்பும், நன்றியும் ❤️🙏@Suriya_offl @hombalefilms #Suriya48 pic.twitter.com/8yhkDYFXGp— Gnanavel (@tjgnan) June 29, 2026
Also Read… சூர்யா – டி.ஜே.ஞனவேல் படத்தை உறுதி செய்தது தயாரிப்பு நிறுவனம்