AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கொட்டப்போகுது மழை.. வானிலை நிலவரம்..

Weather Update: பிப்.15 இன்று முதல் பிப்.19 வரை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 15 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கொட்டப்போகுது மழை.. வானிலை நிலவரம்..
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 15 Feb 2026 06:33 AM IST

சென்னை, பிப்ரவரி 15: தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை (பிப்.16) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மாவட்டங்களில் நேற்றைய தினம் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. எனினும், மாநிலத்தில் பெரும்பாலான இதர பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. அதோடு, ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியல் உயர்ந்தும் ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டியும் காணப்பட்டது. இந்தநிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை கடத்தல்…. விஜய் கண்டனம்

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி:

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதி மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடலில் நாளை (பிப்.15) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (பிப்.15) முதல் பிப்.18 வரை வரண்ட வானிலையே நிலவும். தொடா்ந்து, பிப்.19, 20 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

பனிமூட்டம் குறித்த முன்னறிவிப்பு:

பிப்.15 இன்று முதல் பிப்.19 வரை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 15 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் நாளை (பிப்.16) அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

பிப்.19ம் தேதி வரை பனிமூட்டம் தொடரும்:

திருவள்ளூர், சேலம், தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பிப்.17ம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பிப்.18ம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பிப்.19ம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என கூறியுள்ளது.

இதையும் படிக்க : தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லை.. மன்னிப்பு கேட்ட அமித் ஷா..

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

Follow Us