Peddi: ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில்… ராம் சரணின் ‘பெடி’ படத்தின் முதல் பாடல் வெளியானது!
Chikiri Chikiri Song: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ராம் சரண், தெலுங்கு , தமிழ் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இவருக்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் இவரின் நடிப்பில் உருவாகிவரும் பெடி படத்திலிருந்து முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தெலுங்கு சினிமாவில் மெகா பவர் ஸ்டார் (Mega Power Star) என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் ராம் சரண் (Ram Charan). இவரின் நடிப்பில் இறுதியாக “கேம் சேஞ்சர்” என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தை தமிழ் இயக்குநர் எஸ். சங்கர் (S. Shankar) இயக்கியிருந்த நிலையில், படம் அந்த அளவிற்கு வரவேற்புகளை பெறவில்லை. இந்த படத்தின் தோல்விக்கு பிறகு நடிகர் ராம் சரண் நடித்துவந்த திரைப்படம்தான் பெடி (Peddi). இந்த திரைப்படத்தில் ராம் சரண் முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூடிங் கடந்த 2025 மார்ச் மாதம் முதல் தொடங்கியிருந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ராம் சரணின் ரங்கஸ்தலம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக, இந்த பெடி திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman) இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. “சிகிரி சிகிரி” (Chikiri Chikiri) என்ற இப்பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க: ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் எப்போது?.. அட அந்த இடத்தில்தான் நடக்கிறதா? வைரலாகும் தகவல்!
நடிகர் ராம் சரண் வெளியிட்ட பெடி படத்தின் முதல் பாடல் தொடர்பான பதிவு :
Here is the #Peddi First Single #ChikiriChikiri ❤️🔥
▶️ https://t.co/PPZH4P1dicLoved dancing to this @arrahman sir’s special composition ❤️#PEDDI WORLDWIDE RELEASE ON 27th MARCH, 2026.@NimmaShivanna #JanhviKapoor @BuchiBabuSana @arrahman @RathnaveluDop @artkolla @NavinNooli… pic.twitter.com/SioEkfYf8K
— Ram Charan (@AlwaysRamCharan) November 7, 2025
பெடி திரைப்படத்தின் கதைக்களம் என்ன :
இந்த பெடி திரைப்படமானது ஒரு கிராமம் சார்ந்த திரைக்கதையுடன் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் முக்கியமாக கிரிக்கெட் தொடர்பான கதை மற்றும் சிறிய அரசியல் போன்ற கதைக்களத்தில் உருவாகி வருவதாக தெரிகிறது. ரங்கஸ்தலம் திரைப்படத்திற்கு பின் மீண்டும் கிராமத்து இளைஞனாக ராம் சரண் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் மூலமாகத்தான் முதல் முறையாக ராம் சரண் மற்றும் ஜான்வி கபூரின் ஜோடி இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பிக் சர்ப்ரைஸ்!
இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாம். படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், விரைவில் முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்ததாக ராம் சரண் தமிழ் பிரபல இயக்குநர் ஒருவருடன் இணைவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததும் புதிய படத்திற்கான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.